புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பதியில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சம் எதிர்வரும் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

எதிர்வரும் 20.09.23 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்களுக்கு மகோற்சவம் நடைபெறவுள்ளது.
27.09.23 அன்று சப்பறத்திருவிழாவும்,28.09.23அன்று தேர்த்திருவிழாவும்,29.09.23 அன்று தீர்;த்த உற்சவமும் சிறப்புற நடைபெறவுள்ளது.

இதனை விட சிறப்பாக எதிர்வரும் 18.09.23 அன்று அவணி மகா சதுர்த்தியான அன்று பிள்ளையாருக்கு கணபதி கோமம் மற்றும் பஞ்சமுக அர்ச்சனை என்பன சிறப்பாக நடைபெறவுள்ளது.

திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் மகேஸ்வர பூசையான அன்னதான நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *