8 நாடுகளுக்குரிய சார்க் மாநாட்டிற்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கலாநிதி Mohammad Abed Ali, சார்க் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை்ககான விசேட பிரதிநிதி யூட் நிமலனை சந்தித்துள்ளார்.
கொழும்பில் கடந்த 9ஆம் மாதம் 11ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த சந்திப்பு காலை 11.30 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
நாட்டின் அரசியல் நிலைப்பாடுகள் , நாட்டின் தற்போதைய மனித உரிமை பிரச்சினைகள், குறிப்பாக வடக்கிழக்கில் போருக்கு பின் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை பிரச்சினைகள், மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற விடயங்களை கேட்டறிந்தார்.
தனி மனிதனாக தேசிய ரீதியில் யூட் நிமலன் முன்னெடுத்துள்ள பணிகளையும் சேவைகளையும் வியந்து பாராட்டியுள்ளார்.
சார்க் மனித உரிமையுடைய பணிகளை இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களிலும் தேசிய ரீதியில் கட்டமைக்கும் பணிகளையும், எதிர்காலத்தில் இலங்கையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பிலும் விசேட பிரதிநிதி யூட் நிமலனுடன் சந்தித்து பேசியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கையில் இடம்பெறும் தேர்தலை கண்கானிப்பதற்கான பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்]