பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைதாகி விடுதலை!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் மூன்று வழக்கு தவணைக்கு செல்லாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நீதிமன்றில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த 12.06.2022 அன்று கபோக் கல்லிலால் ஆன புத்தர்சிலையினை குருந்தூர்மலையில் வைக்கும் நோக்கில் பிக்குமார்கள் வருகைதந்தபோது அங்கு மக்கள் மக்கள் பிரநிதிகள் திரண்டு அந்த நடவடிக்கை நீதிமன்றத்திற்கு புறம்பான நடவடிக்கை என தெரிவித்து அந்த இடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் இடமாக காணப்படும் குறித்த இடத்தில் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் செய்யக்கூடாது என பணித்திருந்த நிலையில் இராணுவத்துடன் சேர்ந்து இவர்கள் கட்டுமான பணியினை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்கள்.

அந்த இடத்தில் நீதிமன்ற கட்டளையினை மதித்து நடக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாகவே போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொலீசார் இனவாதாமாக பௌத்த பிக்குகளின் பொய்யான முறைப்பாட்டின் அடிப்படையில் முறைப்பாட்டினை ஏற்று வழக்கினை பதிவுசெய்துள்ளார்கள்.

சட்டவிரோத குருந்தூர்மலை பிக்குவான கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட 7 பிக்குமார்கள் சேர்ந்து  முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாட்டினை தாக்கல் செய்துள்ளார்கள் அவர்களின் பௌத்த வழிபாட்டினை தடைசெய்வதாக பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம்,செ.கஜேந்திரன் முன்னால் வடமாகாணவிவசாய அமைச்சர் க.சிவனேசன்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,சமூக செயற்பாட்டாளர் யூட் உள்ளிட்டவர்கள் மீது முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இந்த வழக்கு விசாரணை கடந்த காலங்களில் முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தவணைகளுக்கு க.சிவனேசன்,து.ரவிகரன்,யூட் ஆகியோர் முன்னிலையாகி வந்துள்ள நிலையில் பௌத்த துறவிகளால் குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ மற்றும் கயேந்திரன் ஆகியோருக்கு உரியமுறையில் அழைப்பாணை அனுப்பப்படாதாதல் பொலீசாரிடம் இருந்து அவர்களுக்கு உரிய தகவல் வழங்கப்படாததால் அவர்கள் அந்த வழக்குகளில் முன்னிலையாகவில்லை

இந்த நிலையில் 14.09.23 இன்றும் நீதிமன்ற தவணைக்கு வருமாறு பொலீசாரின் அழைப்பு வினோ எம்.பிக்கு விடுக்கப்பட்ட போதும் கஜேந்திரன் அவர்களுக்கு விடுக்கப்படவில்லை  இந்த நிலையில் இன்று 14.09.23  வழக்கி;ல் முன்னிலையாகி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நீதிமன்றத்தினால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
அடுத்த தவணை 11.01.2024 திகதியிடப்பட்டுள்ளது.

ReplyForward

Tagged in :

Admin Avatar