முள்ளியவயளை மாட்டு கள்ளன் பொலீசாரால் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் பசுமாடுகளை திருடி இறச்சிக்காக விற்பனை செய்து வருகின்றமை அதிகரித்துள்ளது.

இதில் ஒருசில இளைஞர் கும்பல் ஒன்றே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை மக்கள் அறிந்துள்ளது முள்ளியவளை செங்குந்தாவீதி,மற்றும் பூதன்வயல், வற்றாப்பளை போன்ற பகுதிகளில் மக்களின் கால்நடைகள் அதிகளவு களவு போயுள்ளது.

இது தொடர்பில் கடந்த காலங்களில் மக்கள் பொலீசாரிடம் முறையிட்டும் எவரும் கைதுசெய்யப்படவில்லை இறச்சியாக்கி அதனைவிற்பனை செய்து வருபவர்களும் முள்ளியவளை பிரதேசத்தில் அவர்கள் இறச்சி வியாபாரத்திற்காக இவ்வாறு கள்ள மாடுகளை குறைந்தவிலையில் காவாலிகளிடம் இருந்து வாங்கி அதிக விலையில் இறைச்சிகளை விற்று வருகின்றார்கள்.

முள்ளியவளை செங்குந்தா வீதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் மாடு கடத்தும்கூட்டத்துடன் சேர்ந்து மாடுகளை கடத்தும் போது கையும் களவுமாக பொலீசாரிடம் பிடிபட்டுள்ளார்.

3ஆம் கட்டைப்பகுதியில் இரவு வேறை மாட்டினை கடத்திசெல்லமுற்றபட்ட போது இவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள் இவருடன் சேர்ந்து மாடு கடத்தலில் ஈடுபட்ட மற்றையவர்களை பொலீசார் தேடிவருகின்றார்கள்.
முள்ளியவளை பிரதேசத்தில் மாத்திரம் அண்மையில் 50 மேற்புட்ட மக்களின் பசு மாடுகள் களவாடப்பட்டுள்ளதுடன் கன்றுகள் வீடுகளில் நிக்க மாடுகளை கடத்தும் இவ்வாறான நபர்களை மக்கள் சரியாக இனம் காட்டவேண்டும்

Tagged in :

Admin Avatar