அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி!


அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்  ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

இந் நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் இன்று (11) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *