Monday, May 5, 2025
HomeUncategorizedகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று 09.09.23  தர்மலிங்கம் -பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி ளு.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் நான்காவது நாள் அகள்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாள இலக்கத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் கருத்து தெரிவிக்காத நிலையிலை மாலை 4.00 மணிக்கு இன்றைய அகழ்வு பணியினை தொல்பொருள் திணைக்களத்தினர் முடித்துள்ளார்கள்.

இன்றும் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments