சுதந்திரபுரம் இளைஞர் விளையாட்டு கழகத்தின் துடுப்பாட்ட போட்டி!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் மத்திபகுதியில் உள்ள இளைஞர் விiளாட்டு கழகத்தினால் நடத்தப்படும் மாபெரும் துடுப்பாட்ட போட்டி 26.08.23 இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தாவளை,யற்றாளை  பகுதிதியனை சேர்ந்த சின்னப்பு தம்பிராசா அவர்களின் 27 ஆவது ஆண்டு நினைவாக சுதந்திரபும் இளைஞர் விiளாட்டு கழத்தின் பெயர்சூட்டப்பட்ட நினைவு கல் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இராமர் ஆலய குருக்களான சிவசிறி சிவகுமாரகுருக்கள், சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள 9 ஆவது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி மேயர் பி.செய்சா சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

5ஓவர்கள் கொண்ட துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 33 கழகங்கள் போட்டியிடவுள்ளன. இதன் தொடக்க நிகழ்வினை பிரதம விருந்தினர் கௌரவ விருந்தினர்கள் கலந்துகொண்டு தொடக்கிவைத்துள்ளார்கள் ஒவ்வொரு சனி ஞாயிற்று கிழமைகளில் இந்த போட்டிகளக் தொடராக நடைபெற்று இறுதி போட்டிக்கான அணிகள் தெரிவுசெய்யப்படவுள்ளன.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *