வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு கொடுக்காமல் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டும்-தெ.இந்திரதாஸ்!
இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணங்கள் தேவைஇல்லாத செலவுகள் செய்யப்படுகின்றன.அதனை சரியாக மக்களிடம் கொண்டு செல்வோமாக இருந்தால் மக்களின் வாழ்வாதரம் மேம்படும் வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு கொடுக்காமல் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டும் இலவசமாக கொடுக்கும் போது அதன் பெறுமதி மக்களுக்கு தெரியாமல் போகின்றது என வி;.பி.பவுண்டேசன் அமைப்பின் நிறுவுனர் தெய்வேந்திரம் இந்திரதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுவரை 16 வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் பயன் பெற்றுள்ளார்கள்.சிறுவர் சேமிப்பு என சேமிப்பினை வைத்து ஒவ்வொரு மாணவர்களும் எதிர்காலத்தில் 18 வயதினை அடையும் போது ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் சேமிக்கப்படும்.தற்போது தையல் நிலையம் ஒன்றினை பெண்களின் வாழ்வாதாரத்திற்காக மேற்கொண்டு வருகின்றோம் அதில் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம் நலிவுற்ற மக்களுக்காக முற்;றுமுழுதாக இலவச அமரர் ஊர்திசேவையினை மேற்கொள்கின்றோம் இதனை விட நலிவுற்ற மக்களுக்காக இலவச போக்குவரத்தினை செய்ய கோரியுள்ளார்கள் அதனையும் விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்.இதனை நாங்கள் உருவாக்கிய கூட்டுறவு குழுக்கள் ஊடாக சுமார் ஒரு கோடி நிதியினை மக்களுக்கு வழங்கி அவர்கள் கூட்டுறவு ஊடாக சிறு சிறு கைத்தொழில் செய்து அவர்கள் வாழ்வில் முன்னேறிவருகின்றார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 குழுக்கள் வரையில் இருக்கின்றார்கள் மக்களுக்குள்ளேயே பணம் கூட்டுறவு ஊடாக சுழன்று வருகின்றது.
இன்று மக்களுக்கான எங்கள் நடவடிக்கையினை புலம்பெயர் அமைப்புக்களும் மக்களும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் தொடர்புகளில் வருகின்றார்கள்
வி.பி.பவுண்டேசன் என்பது சொந்த பணத்தில் இயங்கி வருகின்றது எனது பணநடவடிக்கை வங்கி ஊடாக சட்டப்படி நாட்டிற்கு அனுப்புகின்றேன் ஆரம்பத்தில் பல விசாரணைகள் வந்தன அதற்கான விளக்கத்தினை கொடுத்தேன் எமது அமைப்பு இலங்கையாப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது எந்த சிக்கலும் இதுவரை வந்ததில்லைஇங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணங்கள் தேவைஇல்லாத செலவுகள் செய்யப்படுகின்றன.அதனை சரியாக மக்களிடம் கொண்டு செல்வோமாக இருந்தால் மக்களின் வாழ்வாதரம் மேம்படும் வாழ்வாதரம் என்பது இலவசமாக மக்களுக்கு கொடுக்காமல் மக்களின் பங்கும் அதில் இருக்கவேண்டும் இலவசமாக கொடுக்கும் போது அதன் பெறுமதி மக்களுக்கு தெரியாமல் போகின்றது.சரியான கண்காணிப்பு ஊடாக மக்களுக்கான சரியான வாழ்வாதரத்தினை கொண்டு செல்லும் போது எங்கள் தேசத்தினை நாங்கள் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.