பெண்களுக்கான வாழ்வாதார தையலகத்தினை திறந்து வைத்தார் மாவை சேனாதிராசா அவர்கள்!


விசுவமடுவில் பெண்களுக்கான வாழ்வாதார தையலகத்தினை திறந்து வைத்தார் மாவை சேனாதிராசா அவர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வி.பி.பவுண்டேசன் அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த அமைப்பின் தாபகர் தெ.இந்திரதாஸ் அவர்களின் இரண்டு மில்லியன் நிதி உதவியில் வறுமைக்குட்பட்ட பெண்கள் தொழில் முயற்சியினை ஊக்கிவிக்கும் நோக்கில் தையல்கடை ஒன்று விசுவமடு 10 ஆம் கட்டை பகுதியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு 23.08.23 அன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராச அவர்களும் வி.பி.பவுண்டேசன் அமைப்பின் நிறுவுனர் தெ.இந்திரதாஸ் அவர்களும் கலந்து கொண்டு கையல் நிலையத்தினை திறந்துவைத்துள்ளார்கள்.
முதற்கட்டமாக சுமார் 10 பெண்களின் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்காக தையல் இயங்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து தைத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *