விசுவமடுவில் 85 மாணவர்களுக்கு வங்கி கணக்கு திறந்து புத்தங்களை கையளிப்பு!


முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த வறுமைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் சேமிப்பினை ஊக்கிவிக்கும் நோக்கில் மாதாந்தம் 500 ரூபா வைபிலிடும் திட்டத்தில் வி.பி.பவுண்டேசன் அமைப்பினால் மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் திட்டத்தில் 85 மாணவர்களுக்கு இலங்கை வங்கியில் வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு 23.08.23 அன்று விசுவமடு பொது நூலகத்தில் வி.பி.பவுண்டேசன் அமைப்பின் இணைப்பாளர் கரிகாலன் தலமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன் சிறப்பு விருந்தினர்களாக வி.பி.பவுண்டேசன் நிறுவனத்தின் தாபகர் தெ.இந்திரதாஸ் அவர்களும் இலங்கை வங்கியின் வடமாகாண கணக்காய்வு உத்தியோகத்தர் வாசுகி உதயகுமார் இலங்கை வங்கியின் விசுவமடு கிளை முகாமையாளர் எஸ்.கே.நியூமன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

இதன்போது 85 மாணவர்களுக்கு 18அகவை வரை மாதம் தோறும் 500 ரூபா வி.பி.பவுண்டேசன் அமைப்பினால் வைப்பில்இடப்படுவதுடன் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சேமிப்பினை ஊக்கிவிக்கும் நோக்கில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கான ஆரம்பகல்வி வழிகாட்டி புத்தகம்,மற்றும் இலங்கை வங்கியின் சேமிப்பு உண்டியல் என்பன இதன்போது வழங்கிவைக்கப் பட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *