மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடு!


புதுக்குடியிருப்பில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (20.08.2023) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தியாவில இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இரா.சுப்பிரமணியத்தின் மலையக மக்கள் 200 ஆண்டு வரலாறு என்ற நூலும் வெளியிடப்பட்டது.

சமுக செயற்பாட்டாளர் பழனியாண்டி நாகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,  வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன், பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன்  மற்றும் நடராஜா , புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் நவநீதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *