குருந்தூரில் குழப்பத்தினை ஏற்படுத்திய பிக்கு மற்றும் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக முறைப்பாடு!

குருந்தூர் மலையில் வழிபாட்டு உரிமையினை குழப்பமுயற்சித்த மற்றும் மறுத்த திணைக்களத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் 18.08.23 இன்று முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஜயனார் ஆலயத்தின் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின் மற்றும் பொலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காட்டப்பட்ட ஒரு இடத்தில் நிலத்தில் படாதவாறு நெருப்பு மூட்டி பொங்கல் பொங்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சைவ மக்கள் சைவ கடவுள்களின் படங்களை குறித்த பகுதியில் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு இருந்த வேளை அங்கு பொலீசாரின் பாதுகாப்பினை மீறிவந்த குருந்தூர் மலையின் விகாராதிபதி என தன்னை அடையாளப்படுத்திய கல்கமுவ சாந்தபோதி தேரர் பொலீசாரிடம் சைவ கடவுள்களின் படத்தினை காட்டி பொங்கல் நடவடிக்கையினை குழப்ப முற்பட்டுள்ளார் இந்த நிலையில் அங்குள் சைவ பக்த்தர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து அவரை செல்லுமாறு பொலீசாருக்கும் பணித்துள்ளார்கள்

இவ்வாறு தமிழ்மக்களை குழப்ப முயன்ற குறித்த தேரரின் நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களினால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மத வழிபாட்டு சுதந்திரத்தினை மறுத்து பொங்கல் வழிபாட்டில் பொங்கல் நேர்த்திக்கடனை செய்யவிடாது தடுத்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறியும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தினர் பொங்கல் பொங்குவதற்கு அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒரு இடத்திலேயே பொங்கல் பொங்க அனுமதித்தார்கள் இதானால்  நேர்த்திக்கடனை செய்வதற்காக பொங்கல் பொங்குவதற்கான ஆயத்தங்களுடன் சென்ற ஏனைய மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை இந்த நிலையில் ஒருஇடத்தில் மூட்டப்டப்ட அடுப்பில் இரண்டு தடவைகள் பொங்கல் பானைவைத்து பொங்கல் பொங்கி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்.

இந்த பொங்கல் வழிபாட்டிற்காக பொலீசாராலும்,தொல்பொருள் திணைக்களத்தினராலும் காலை 8.00 மணிதொடக்கம் 12.00 மணிவரையான நேரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tagged in :

Admin Avatar