குருந்தூர்மலை  சென்ற அனைவரும் பொலீசாரின் கண்காணிப்பில்!

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையின் ஆதிசிவன் ஆலயத்தின் பொங்கல் நிகழ்விற்காக சென்ற மக்கள் அனைவரும் பொலீசாரினால் பதிவுசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இன்று குமுழமுனை ஊடாக தண்ணிமுறிப்பு செல்லும் வீதியில் அதிகளவில் பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதியால் பயணிக்கும் அனைவரும் பொலீசாரினால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்;து சுமார் 300 வரையான பொலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனைவிட சிங்கள மக்கள் வழிபாடுகளை மேற்கொண்ட விகாரை அமைந்துள்ள பகுதியினை சுற்றி அதிகளவான பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆதிசிவன் ஆலய பொங்கலுக்கு சென்ற பக்த்தர்களை சுற்றியும் பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குருந்தூர் மலையில் கலகம் அடக்கும் பொலீசாரும் கண்ணிர்புகை குண்டு துப்பாக்கிகள் சகிதம் பாதுகாப்பு கடமையில் இருந்துள்ளதுடன் துப்பாக்கி ஏந்திய அதினவான சிறப்பு அதிரடிப்படையினரும் ஆதிசிவன் பொங்கல் நிகழ்வின் பக்த்த அடியார்களை சுற்றி பாதுகாப்பு கடமையில் நின்றமையினையும் அவதானிக்க முடிந்துள்ளது.

இரு மத வழிபாடுகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் இருபகுதியினரும் மற்றைய பகுதிகளுக்கு செல்லவிடாது பொலீசார் கடமைகளில் நிறுத்தப்பட்டுள்ளமையுடன் பொங்கல் நிறைவு பெற்றதும் அங்கு நின்ற ஊடகவியலாளர்கள் சிலரினை பொலீசார் உறுதிப்படுத்துவதற்காக அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Tagged in :

Admin Avatar