ஒரு இனத்தின்னுடைய ஆதிக்கம் என்பதெல்லாம் அவனுடைய கலையிலும் கலை சார்ந்த அம்சங்களிலும் அவனுடைய வழிபாட்டு மரபுகளில்தான் தங்கி இருக்கின்றது இன்று இப்படிப்பட்ட விடையங்கள் எல்லாம் எங்களை விட்டு அருகி செல்கின்ற நாகரிகம் என்ற போர்வையில் நாங்கள் வாழதயப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்று முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 12.08.23 அன்று முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் அரங்கேற்றப்பட்ட வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்றினை சித்தரிக்கும் முல்லைமோடி வட்டக்களரி கூத்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முள்ளியவளையில் சிறப்புற அரங்கேற்றப்பட்ட பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து
அடங்காப்பற்றின் வன்னி மன்னன் மாவீரன் பண்டார வன்னியன் வரலாற்றினை முல்லை மோடி அவர்கள் எழுதியுள்ளார் இந்த வரலாற்றினை சிறந்த முறையில் கடந்த காலங்களில் கலைவடிவம் ஊடாக பேணி வந்த கலாபூசணம் என்.எஸ். மணியம் அவர்களின் எழுத்துருவாக்கம்,நெறியாள்கை,உடைஅலங்காரம்,ஒப்பனையுடன் சிறப்புற அரங்கேற்றப்பட்டுள்ளது.
கடந்த 12.08.23 அன்று முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய முன்றலில் வட்டக்களரியில் முள்ளியவளை கலைஞர்களின் சிறப்பான நடிப்பாற்றலுடன் அரங்கேற்றப்பட்ட நிகழ்வில் பொதுச்சுடரினை முள்ளியவளை கல்யாணவேலவர் ஆலய குருக்கள் ரகுநாதகுருக்கள் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி க.பரஞ்சோதி,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்,ஒட்டுசுட்டான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கை.சுதர்சன் உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் ஏற்றிவைத்து கருத்துக்களை தெரிவித்து நிகழ்வினை தொடக்கிவைத்துள்ளார்கள்.
இந்த நிகழ்வில் சிறப்புரையினை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்
கூத்து மரபுகளில் யாழ்ப்பாணத்திற்கு என்று கிழக்கு மாகாணத்திற்கு என்று வன்னிக்கு என்று ஒரு மரபு இருக்கின்றது வன்னி என்பது பழமையினையும் சிறப்பிiனையும் மங்காது தன்னுடன் கொண்டு சேர்க்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களினால் பண்டாரவன்னியனின் கதை ஒரு நாடகமாக உருப்பெற்று சிறப்பாக இடம்பெற்று வந்தது.
கற்சிலை மடுவினை மையமாக கொண்டு வன்னிமண்ணின் வரலாறு புனையப்பட்டு சிறந்த வீரத்தினுடைய சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
அதில் எங்களின் கலைகள் கலை அம்சங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பதற்காக என்.எஸ்.மணியம் அவர்கள் அதற்கான ஒரு ஆக்கஊக்கத்தினை கொடுத்து இன்று வட்டக்களரி முறையில் முல்லை மோடியாக அரங்கேற்றப்பட்டுள்ளது.
நாங்கள் எங்களின் எத்தனையோ விடையங்களை இன்று இழந்து கொண்டிருக்கின்றோம் எங்களின் மரபுரிமைகள் எல்லாம் மறக்கப்பட்டு மறுக்கப்பட்ட சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் ஒரு மனிதனுடைய உயர்வு அவனின் நிலைத்த தன்மை ஒரு இனத்தின்னுடைய ஆதிக்கம் என்பதெல்லாம் அவனுடைய கலையிலும் கலை சார்ந்த அம்சங்களிலும் அவனுடைய வழிபாட்டு மரபுகளில்தான் தங்கி இருக்கின்றது இன்று இப்படிப்பட்ட விடையங்கள் எல்லாம் எங்களை விட்டு அருகி செல்கின்ற நாகரிகம் என்ற போர்வையில் நாங்கள் வாழதயப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் இது ஒரு இனத்தின் இருப்பினை அழிக்கின்ற ஒன்றாகத்தான் காணப்படுகின்றது.
மீண்டும் நாங்கள் எங்களின் இன இருப்பினையும் கலாச்சார விழுமியங்களையும் பேணவேண்டுமாக இருந்தால் இதுபோன்ற விடையங்களில் கூடுதலான கவனம் செலுத்தி எங்களின் கலைகளும் கலாச்சாரங்களும் எங்களை விட்டு போகாத வகையில் பேணுவதற்கு எல்லோரும் உரம்சேர்க்கவேண்டும்
முல்லை மண்ணின் சிறப்பினை கொண்டுவரக்கூடிய முல்லை மோடி என்கின்ற கூத்து நிலைத்து இந்த மண்ணின் பெருமைகளை முல்லைக்கு அப்பாலும் இந்த தேசங்கள் எல்லாம் கொண்டு செல்லவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.