செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று 14.08.23 வள்ளிபுனம் பகுதியில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றிய தாய்த்தமிழ் போரவையின் நிறுவுனர் சா.ரூபான் தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடு தொhடர்பில் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
போர் முடிவடைந்த பின்னர் முழுமையாக தமிழ் தேசத்தினை அங்கிகரிக்காத தமிழர்களின் வரலாறுகளை பிரட்டிபோடுகின்ற நிலையில் சிங்கள தேசம் பௌத்த சமயம் இன்று தலைதூக்கி நிக்கின்றது.
எங்களின் வரலாறுகளை மறைப்பதற்கும் அடக்குவதற்கும் சிங்கள அரசும் அதன் இராணுவ புலனாய்வளர்களும் எங்களை முடக்குவதற்கு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
எதிர்காலத்தில் இன்னும் என்ன ஏற்படும் என்ற நிலை இருக்கின்றது அதற்காக தமிழர்களின் வரலாறுகளை எதிர்கால சந்ததிக்கு கடத்தி செல்லவேண்டியதேவை இருக்கின்றது.
எங்கள் நிலங்களை ஆக்கிரிமித்து வருகின்ற சிங்கள அரசும் ஆக்கிரமிப்பாளர்களும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை கைப்பற்றுவதற்காக அதனை தொடர்ச்சியாக தங்கள் தேசமாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் எடுக்கின்றார்கள் இதற்கு எதிதாக தமிழகளின் ஒருசில சமூக சேவையாளர்களும் ஒருசில அரசியல் வாதிகளும் எதிர்த்து நின்று போராடுகின்றார்கள்.
இந்த இடத்தில் வெளிப்படையாக நான் கூறவேண்டுமாக இருந்தால் எங்கள் தமிழ் அரசியல் வாதிகளின் நிலைப்பாடு
செஞ்சோலை படுகொலை நடைபெற்றது தமிழர்தேசத்தில் உலநாட்டில் வரலாறாக பதியப்பட்ட இந்த முல்லைத்தீவு வள்ளிபுனம் மண்ணில் இந்த இடத்தில் பார்த்தால் ஒருசில அரசியல் வாதிகளை தவிர வேறு எவரும் பங்கு கொள்ளவில்லை
அன்று செஞ்சோலை வளைவு மற்றும் நினைவுதினம் ஆரம்பிக்கின்றபோது அன்று தேர்தல் காலம் என்பதால் இந்த வீதியில் வெள்ளை வேட்டிகளுடன் உலாவந்தவர்கள் இன்று அரசியல் வாதிகள் என்ற பட்டியலில் இங்கு நிற்பவர்கள் ஒருசில அரசியல் வாதிகள் து.ரவிகரன்,; ஜீவன் போன்றவர்கள் தான்.
பாராளுமன்றில் பேசுவதை விட்டு மக்களின் நிகழ்வினை மக்கள் இடத்தில் துணிந்து நின்று செய்திருக்கவேண்டும் இந்த இடத்தில் இராணுவ புலனாய்வாளர்கள் வந்து நின்றால் விட்டு சென்று விடுவீர்கள் குறைகூறுவதற்கு இன்னும் ஒரு கூட்டம் போடுவீர்கள் இன்று தேர்தல் காலமாக இருந்திருந்தால் இந்த இடத்தில் அரசியல் வாதிகள் நிறைந்திருப்பார்கள்.
ஒருசில அரசியல் வாதிகளை தவிர ஏனையவர்களுக்கு துணிவு இல்லை செஞ்சோலை மாணவர்களின் திருவுருவப்படம் பொறித்த மாபிள்கைள இங்கு நினைவு வளைவில் வைப்பதற்கு கூட துணிவில்லாதவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இது கிடக்கின்றது இதனை இங்கு பொருத்துவதற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு துணிவு இல்லை என்றுதான் நான் சொல்கின்றேன் தன்னுடைய வீட்டில் படத்தினை வைத்துக்கொண்டிருக்கின்றார்.
இந்த நிகழ்வினை நாங்கள் நடத்தவிடமல் பொலீசாருடன் தடுக்கின்றார்.
ஏன் நாங்கள் மற்றவர்களை குறை கூறுகின்றோம் எங்கள் தமிழ்பேசும் அரசியல் வாதிகள் ஒற்றுமையாக செயற்படவேண்டும் கட்சிகளை விடுங்கள் எங்கள் மக்களுக்காக இந்த மண்ணின் விடுதலைக்காக மாவீரர்களின் தியாகங்களுக்காக தமிழ் அரசியல் வாதிகள் ஒன்று சேர்ந்து நிக்கவேண்டும்.
இந்த செஞ்சோலை நிகழ்வில் எந்த அரசியல் கட்சி சார்ந்தவர்களும் நாங்கள் ஒன்று சேரவில்லை எங்கள் மக்களின் நினைவிற்காக நினைவுநாட்களை எந்த தடைவரினும் நாங்கள் சிச்சயமாக மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
புல ஆண்டுகளாக போராடி தங்கள் அங்கங்களை இழந்து மூத்த போராளிகள் இங்கு அமைதியாக இருக்கின்றார்கள் எந்த வித சம்மந்தமும் இல்லாதவர்கள் இன்று தேசியம் பேசகின்றார்கள்.
இந்த செஞ்சோலையில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்கள் படும் துயரங்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று பார்தால்தான் தெரியும்.
ஆகவே இந்த இடத்தில் எங்கள் மக்களின் மாவீரர்களின் நிகழ்வுகளில் அரசியல் பேசுபவர்கள் உங்களுக்கு துணிவிருந்தால் தமிழ்பேசுகின்ற அரசியல் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து வருகின்ற தடைகள் எல்லாம் உடைத்து அந்த நிகழ்வுகளை நடத்தவேண்டும் அதனை விடுத்து பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக போய் இருந்து கொண்டு தேசியம் பேசாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.