குருந்தூர்மலையில் ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் பொங்கல் பொங்கி வழிபடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்ள தமிழ்மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
கடந்த 08.08.23 அன்று குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபட தடை செய்ய இல்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்ள சைவ மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் குருந்தூர்மலையில் தமிழர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்துமாறு ஆழும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர பாராளுமன்றில் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இவ்வாறு தமிழர்கள் வழிபாடு செய்வதனை தடுக்கும் நடவடிக்கையில் கடும்போக்குவாத அரசியல் வாதிகள் சிலர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில்.
குருந்தூர் மலையினை தீவிரவாதிள் என தமிழர்களுக்கு முத்திரை குத்தி அவர்கள் குருந்தூர் விகாரையினை சேதப்படுத்த உள்ளார்கள் என்றும் அதனை காப்பாற் அனைத்து பௌத்தர்களும் அணிதிரளவேண்டும் என்றும் குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சாந்தபோது சமூகவலைத்தளங்களில் பெரும்பான்மை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை 18,19,20 ஆம் திகதிகளில் பௌத்த வழிபாடு ஒன்றினை குருந்தூர்மலையில் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்காக பௌத்தமக்கள் அனைவரும் அணிதிரண்டு வருவதுடன் ஆதரவினையும் வழங்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பானது எதிர்வரும் 18 ஆம் திகதி குருந்துர் மலையில் உள்ள ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் பொங்கல் பொங்கி வழிபாட்டினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பாரிய முரண்பாட்டினை தோற்றுவிக்கும் என எதிர்பாக்கப்பட்டுள்ளது
கடந்த காலங்களில் குருந்தூர்மலையில் நடந்தவை..