தமிழர்கள் மீது வேறு வடிவங்களிலும் இனப்படுகொலையினை செய்துவருகின்றார்கள்!


தமிழர்களை  இந்த அரசும் கடும்போக்குவதாதிகளும் ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இனப்படுகொலை என்ற வடிவத்தினை மாற்றி வேறு வேறு வடிவங்களில் செய்துவருகின்றார்கள்.

இப்போது தென்னிலங்கையினை சேர்ந்த ஒருவர் சொல்லி இருக்கின்றார் தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவோம் என்று இவ்வாறு ஒவ்வொருவரும் பேசி வருகின்றார்கள் தமிழர்களின் வீரத்தினை காலம் காலமாக சொல்லி வருகின்றார்கள்.

வே.பிரபாகரன் அவர்கள் தலை சிறந்த வீரன் என்பதை உலகத்திற்கு காட்டி நின்றார் இந்த நிலையில் தலைகளை கொண்டு சொல்லப்போகின்றார்களாம் களனிக்கு இப்படியான அரக்க குணம் கொண்டவர்களை வைத்துக்கொண்டுதான் அரசு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களின் தலைகளை கொண்டுவருவோம் என்று சொல்கின்றவர் 2015 ஆம் ஆண்டு றாஜபக்சவின் ஆட்சியில் ஒரு அமைச்சராக இருந்தவர் அதனை விட சரத்வீரசேகர அவர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு அமைச்சராக இருந்தவர்
சிங்கள மக்களிடமும் புத்திஜீவிகள் இருக்கின்றார்கள் நிச்சயமாக இப்படியானவர்களை ஓரம் கட்டுவார்கள் தமிழர்களுக்கு எங்களை நாங்களே ஆழக்கூடிய தீர்வினை தரவவேண்டும் என்பது எங்களின் கோரிக்கை

குண்டுபோட்டு அழித்த மாணவர்களின் நினைவாக நீஞ்கள் குமுறி அழுது கண்ணீர்வடித்தீர்கள் இதனை செய்தவர்களுக்கான தீர்வினை விடையினை இந்த சொல்லவேண்டி வரும் என்று 14.08.23 முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நினைவுரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *