புதுக்குடியிருப்பில் 19 அகவை இளைஞனின் மோசமான செயல் யுவதி மருத்துவமனையில்!


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலீஸ் எல்லைக்கு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் யுவதியிடம் தொலைபேசி இலக்கம் பெற்று தொலைபேசியில் யுவதியுடன் தொடர்பு கொண்ட இளைஞன் யுவதியினை அழைத்து சென்று பாலியல் உறவு கொண்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதியின் பெற்றோர்களால் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

08.08.23 அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக பாதிக்கப்பட்ட 17 அகவை யுவதி மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 19 அகவையுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் 09.08.23 முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *