பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய முன்றலில்!


வரலாற்று பொக்கிசமான முல்லை மோடியினால் எழுதப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்றினை சித்தரிக்கும் நாட்டுக்கூத்து எதிர்வரும் 12.08.23 ஆம் திகதி முள்ளியவளை காட்டா விநாயகர்ஆலயமுன்றலில் அரங்கேறவுள்ளது.

அடங்காப்பற்றின் வன்னி மன்னன் மாவீரன் பண்டார வன்னியன் வரலாற்றினை முல்லை மோடி அவர்கள் எழுதியுள்ளார் இந்த வரலாற்றினை சிறந்த முறையில் கடந்த காலங்களில் கலைவடிவம் ஊடாக பேணி வந்த என்.எஸ். மணியம் அவர்களின் எழுத்துருவாக்கம்,நெறியாள்கை,உடைஅலங்காரம்,ஒப்பனையுடன் சிறப்புற காண்பிக்கப்படவுள்ளது.

இந்த நாட்டுக்கூத்தின் நேரலையினை https://www.facebook.com/Voiceofmullai/ முகநூல் பக்கம் ஊடாகவும் https://www.youtube.com/@voiceofmullai youtube இலும் நீங்கள் நேரலையாக காணலாம்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *