நந்திசமரை வென்றது உடுப்புக்குளம் அலையோசசை அணி!


முல்லை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் கிராம மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் பேராதரவுடன் *வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழகம்* பெருமையுடன் நடாத்திய அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி மிகப்பிரமாண்டமான முறையில் கடந்த தினம்( 5.08.23 ) இடம்பெற்றது.

இந்த இறுதிப்போட்டி நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் . அத்தோடு வடமாகாண இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் யேசு றெஜினோல்ட் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

உதயசூரியன் (செம்மலை) எதிர் அலையோசை ( உடுப்புக்குளம்)

விறுவிறுவிப்புக்கு பஞ்சமில்லாத இவ் இறுதிப்போட்டியின் முதல்பாதியாட்டத்தில் 2:1 என்ற கோல் கணக்கில் அலையோசை அணி முன்னிலைபெற்றது.

தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாம் பாதியாட்டத்தில் உதயசூரியன் அணியால் மேலும் ஒரு கோல் பெறப்பட்டு, 2:2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனிலை பெற்ற நிலையில், உத்வேகத்துடன் விளையாடிய அலையோசை அணி அடுத்தடுத்து இரு கோல்களை பெற்று ஆட்டத்தினை தம்வசம் முன்னிலைப்படுத்தியது.

இறுதிவரை மட்டும் உதயசூரியன் அணியால் கோல் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி எதுவும் பலனளிக்காத நிலையில், போட்டிநிறைவில் 4:2 கோல் கணக்கில் அலையோசை அணி வெற்றிபெற்று இவ்வாண்டுக்கான நந்திச்சமர் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.

இப்போட்டியில் முடிசூடிக்கொண்ட உடுப்புக்குளம் அலையோசை அணியினருக்கும் சிறப்பானதொரு இறுதியாட்டத்தினை வெளிப்படுத்தி 2ம் இடத்தினை பெற்ற செம்மலை உதயசூரியன் அணியினருக்கும் எமது கழகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இப்போட்டித்தொடரில் ….

3ம் இடம் யங்கஸ் (கோயிற்குடியிருப்பு)

சிறந்த அணி – இளந்தென்றல் (அளம்பில்)

வளர்ந்துவரும் வீரர் – தனுராஜ் (உதயசூரியன்)

மனம்கவர் வீரர்

கஸ்தூல்ராஜ் (உதயசூரியன்)

சிறந்த பின்கள வீரர் – துஸ்யந்தன் (அலையோசை)

தொடராட்ட நாயகன் – பிரபாகரன் (அலையோசை)

சிறந்த கோல்காப்பாளர் – பிளம்மிங் (யங்கஸ்)

இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் விமல்ராஜ் (அலையோசை)

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *