இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடல் !


இலத்திரனியல் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல் சம்மந்தமான கூட்டம் இன்றைய தினம்( 7) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.15 மணியளவில் நிறைவடைந்தது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் காணப்படும் இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரித்து அதன் பின் தகுந்த முறையில் அகற்றுதல் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.அதனைத்தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மரம் நடுதல் தொடர்பான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்,மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன்(நிர்வாகம்),மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(காணி),மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள்,முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் , வலயக்கல்விப் பணி்ப்பாளர் , மாவட்ட வனவளத் திணைக்களத்தின் அதிகாரி, மாவட்ட உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *