முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ் மீனவர்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் வேளை வெலிஓயா,கஜாபுரம்,பதவியா பகுதியினை சேர்ந்த பெரும்பான்மை மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை பலதடவைகள் அரச திணைக்களங்களுக்கு சுட்டிக்காட்டியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
தற்போது தண்ணிமுறிப்பு குளத்தினை ஆக்கிரமிக்கும் நோக்கில் பெரும்பான்னை இனத்தவர்கள் குளத்தில் பெருமளவான நன்னீர் மீன்களை பிடித்து வந்துள்ளார்கள்.
குளத்தில் நன்னீர் மீன்பிடி சங்கங்களாக தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் பெரும்பான்மை இனத்தனரின் இந்த நடவடிக்கை தண்ணிமுறிப்பு குளத்திற்கு அருகில் உள்ள குருந்தூர்;மலையினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பெரும்பான்மை மீனவர்களின் இந்த நடவடிக்கையினால் தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றமை மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இந்த நிலையில் 05.08.23 இன்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தவர்களை தமிழ் மீனவர்கள் மடக்கி பிடித்துள்ளார்கள் இதன்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பொலீசார் வரவளைக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு பொலீசாரின் அனுமதியற்ற செயலில் ஈடுபட்டதற்காக 18 தமிழ் மீனவர்களை ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களை நாளை 06.08.23 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட குருந்தூர்மலைக்கு அருகில் உள்ள தண்ணிமுறிப்பு குளத்தினையும் பெரும்பான்மை மீனவர்;கள் ஆக்கிரமிப்பு செய்து அங்கு நிலையாக தொழில்செய்யும் நடவடிக்கையின் ஒருவடிவமாக இது அமைந்துள்ளமை குறி;பிடத்தக்கது.