தண்ணிமுறிப்பு குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 29 சிங்களவர்கள் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடி சங்கங்களின் மற்றும் அரச அனுமதி இன்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 29 பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்களை ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்கள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களின் இவ்வாறான நடவடிக்கையினால் குளத்தில் உள்ள மீன்வளங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் 05.08.23 இன்று; குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட சிங்கள மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் தண்ணிமுறிப்பு குளத்தில் தொழில் செய்யும் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது இதில் பலர் ஓடிசென்றுள்ளார்கள்.

இவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் 29 பெரும்பான்னை இனத்தினை சேர்ந்த மீனவர்ளும் அவர்கள் கொண்டுவந்த 6 வலைகள்,20 மிதக்கும்ரியூப்புக்ள் என்பன ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும்பான்னை இனத்தவர்களின் அத்துமீறல் நடவடிக்கையினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவந்துள்ள நிலையில் அரச திணைக்களத்திடம் பல தடவைகள் எடுத்துரைத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ் மீனவர்களே இவ்வாறு அத்துமீறிய மீனவர்களை பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you