முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கைவேலி கிராமத்தில் வன வள திணைக்கலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எக்டோ நிறுவனத்தினால் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வன வள திணைக்கலத்தின் எல்லைக்குள் உள்நுளைந்து குடியிருப்புகள் அமைப்பதாக கூறி குறித்த இருபத்திரெண்டு குடும்பங்களுடைய விடுகள் வன வள திணைக்கலத்தால் உடைத்தெரியப்பட்டிருந்த நிலையில் குறித்த மக்கள் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வாக்குறுதிகளின் பின்னர் குறித்த மக்கள் தமது போராட்டத்தினை கைவிட்டு குறித்த இடத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மக்களுக்கு முதற்கட்டமாக சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (எக்டோ) இன்றைய தினம் 04-08-2023 உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் எக்டோ நிறுவனத்தின் மேலாளர் கணபதி பிரசாந்த் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் சபையின் செயலாளர் சட்டத்தரணி திரு .கம்சன் மற்றும் எக்டோ நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.