முல்லைத்தீவு மாவட்டத்தில் 11798 ஹெட்டயர் பரப்பில்  புதிதாக காடுகள்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் 11798 ஹெட்டயர் பரப்பில்  புதிதாக காடுகள் உருவாக்க பரிந்துரை பல மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 வீதமான காட்டிற்கு மேலதிகமாக 5 வீதமாக புதிய காட்டினை உருவாக்குவதற்கு வனவளத்திணைக்களம் பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 70 வீதமான காடுகள் காணப்பட்டுள்ள நிலையில் அதனை மேலும்அதிகரிக்கும் நோக்கில் 5 வீதமாக சுமார் 11798 ஹெட்டயர் பரப்பில் காடுகளை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையினால் இது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மக்களின் நிலங்கள் வனவளத்திiணைக்களத்தின் ஆழுகையின் கீழ் காணப்படுகின்றது வனவளத்திணைக்களத்தின்கீழ் உள்ள நிலங்கள் விடுவிப்பதாக அரசாங்கம் சொல்லப்பட்ட போதும் இதுவரை விடுவிக்கப்படவில்லை மாவட்டத்தில் 20543 ஹெட்டயர் அளவு காணிகளை விடுவிக்க பரிந்துரைக்கப்பட்ட போதும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 11798 ஹெட்ரயர் நிலங்களில் புதிதாக காடுகள் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது இதனால்  பல மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இது தடையாக உள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *