மல்லாவி குளத்தில் மணல் ஏற்றிய இரண்டு வாகனங்கள் பொலீசாரால் மீட்பு! 


முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி குளத்தின் பகுதியில்  அனுமதிப்பத்திரமின்றி  மண்ணகழ்வில் ஈடுபட்ட   குற்றச்சாட்டில் கனரக இயந்திரம் மற்றும்  உழவு இயந்திரம்மல்லாவி பொலிசாரினால் நேற்றைய தினம் 14/07/2023 அன்று  கைப்பற்றப்பட்டுள்ளது 

மல்லாவி குளத்தின்  உட்பகுதியில்  உழவு இயந்திரங்களை இறக்கி மணல் ஏற்றிய குற்றச்சாட்டிலேயே குறித்த வாகனங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் மல்லாவி  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்டுள்ள இதே வேளை அதன் சாரதிகளை பொலிஸ் பிணையில் செல்ல பொலிசார் அனுமதித்துள்ளதாகவும்,  கனரகம் மற்றும்   உழவு இயந்திர சாரதிகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாங்குளம் நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் புதன்கிழமை (19.07.2023) பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவி்த்தனர்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *