முத்தயன்கட்டு குளத்தின் கீழ் 3320.5 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!


முத்தயன்கட்டு குளத்தின் கீழ்   3320.5 ஏக்கர்  நெற்செய்கைக்கும்  739 ஏக்கரில்  உப உணவு பயிர்ச்செய்கைக்கும் தீர்மானம்  

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட முத்தயன்கட்டு குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நேற்றைய தினம் (21.03.2023)  ஒட்டுசுட்டான் நீர்பாசன திணைக்களத்தின் அலுவலகத்தில்  நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையில் முத்தயன்கட்டு குளத்தின் கீழ் 3320.5 ஏக்கர் அளவிலும், உப உணவு பயிர்ச்செய்கைக்கு 739 ஏக்கர் அளவிலும் பயிர்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வருகின்ற 03.04.2023 அன்று முத்தயன்கட்டு குளத்தின் நீர் திறந்துவிடப்படவுள்ளது. இந்த பயிர்ச்செய்கைக்கான காலம் மூன்றரை மாதங்களாகும். தற்போது குளத்தின் நீர்மட்டம் 20அடியாக காணப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க  அதிபர் திரு.எஸ்குணபாலன்(காணி) , ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதி நீர்பாசன பொறியியலாளர்,  முத்தயன்கட்டு குளத்தின் பொறியியலாளர்,விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், நெக்டா நிறுவனத்தின் அதிகாரிகள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிகள் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *