முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மதிப்பார்ந்த திரு.அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் (09.07.2023) காலை 8.58 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.

காலை 8.00 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மங்களகரமான வரவேற்புடன் அழைத்து வரப்பட்டு தனது கடமையினை சுபநேரத்தில் சிறப்புடன் ஆரம்பித்தார்.

இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினை பொறுப்பேற்க முன்னர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கப்பால் அரச பணியில் பல உயர்பதவிகளை ஆற்றியுள்ளார்.

இவர் ஆரம்ப கல்வியினை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையிலும் இடைநிலை கல்வியினை கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பயின்று வர்த்தக பிரிவில் அதி சிறப்பு சித்தி பெற்று உயர்கல்வியினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தில் தொடர்ந்து முதுநிலை கல்வியினை கொழும்பு ஸ்ரீஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

இந்த வரவேற்பு விழாவில்

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ஜகு, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக், மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. லிங்கேஸ்வரன், உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகரும் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜெயபவாணி, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *