Thursday, May 1, 2025
HomeUncategorizedகண்ணாடி புடையன் கடித்ததில் உயிரிழந்த இளைஞனின் இறுதி நிகழ்வு!

கண்ணாடி புடையன் கடித்ததில் உயிரிழந்த இளைஞனின் இறுதி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை முறிப்பு பகுதியில் வயலுக்கு சென்ற இளைஞன் அரவம் தீண்டி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 06.07.23 அன்று இடம்பெற்றுள்ளது வயலை பார்க்க சென்ற முறிப்பு பகுதியினை சேர்ந்த 27 அகவையுடைய மகேந்திரன் கஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அன்று மாலை அரவம் தீண்டியஇளைஞன் மயக்கமடைந்த நிலையில் அவனை தீண்டிய அரவத்துடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கண்ணாடி புடையன் எனப்படும் புடையன் வகை அரவவே தீண்டியுள்ளது இளைஞனின் குதிக்காலில் அரவம் தீண்யதன் காரணத்தினால் விசம் நரம்பு மண்டலத்திற்கு உடன் ஏறி விசம் தலைக்கேறியுள்ளதாக அவனது உயிரிழப்பு தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவனது உடலம் 07.07.23 அன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறுதி நிகழ்வுகள் 09.07.23 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் நாளை 09.07.23 காலை நடைபெறவுள்ளது முறிப்பு முள்ளியவளை யை பிறப்பிக்கவும் வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் (தேவன்) கஜன் 06.07.2023 வியாழக்கிழமை அகாலமரணமானார் அன்னார் மகேந்திரன்(தேவன்) சாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்

சயந்தன்(கண்டு) உசாந்தன்(பவுணன்) கஜந்தா டிசாந்(மான்குட்டி) ஆகியோரின் அன்புச்கோதரனும் நிகிலா லக்சனா டிலான் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான முத்தன் கனகம்மா தங்கராசா மற்றும் கமலம் ஆகியோரின் பாசமிகு பேரனும்

காலஞ்சென்றவர்களான புலேந்திரன்(சிவா) செஞ்சுலட்சுமி மற்றும் தயாநிதி பவாநிதி ஜெயாநிதி சித்திரா ஜெனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு மருமகனும் துரைசிங்கம் ரவீந்திரன் குணவதி கவிதா வனிதா (லண்டன்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்

சஞ்சை கரிஸ்மி அர்விந் ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.07.2023ஞாயிற்றுக்கிழமை மு ப 08மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று உடலம் நல்லடக்கத்திற்காக முறிப்பு கற்பூரப்புல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments