அகழ்வு பணிகள் மூலமாக மூடி மறைக்கப்படகூடிய ஆபத்து இருக்கின்றது!

சர்வதேச கண்காணிப்புடன் அகழ்வுப்பணிகள் மேற்கொண்டால்தான் உண்மைகள் வெளிக்கொண்டுவரலாம்-செ.கஜேந்திரன்!

29.06.23 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி கிராமத்தில் நீர்வளங்கள் வடிகால் அமைப்பு சபையின் நீர் விநியோகம் செய்வதற்காக நிலத்தினை தோண்டிக்கொண்டிருக்கும் போது நிலத்தில் இருந்து பெண்போரளிகளது எனசந்தேகிக்கப்படும் உடலங்களின் எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன. இந்த இடத்திற்கு சென்ற தமிழ்தேசிaய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் இடத்தினை பார்வையிட்டுள்ளதுடன் அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

1984 ஆம் ஆண்டு கொக்குளாய்,கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி மக்கள் இராணுவத்தினலும் அரச இயந்திரங்களாலும் வெளியேற்றப்பட்ட பின்னர் 2009 ஆம் ஆண்டு வரை இந்த பகுதி முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் காணப்பட்டுள்ளது இந்த பகுதியில் பாரிய இராணுவ முகாம் ஒன்று காணப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது என்பது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுடையதாக அல்லது போரில் உயிரோடு பிடிக்கப்பட்ட போராளிகள் கொண்டுவந்து புதைக்கப்பட்டுள்ளதா என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏழுந்துள்ளது இது தொடர்பான முழுமையான அகழ்வு பணி நடைபெறவேண்டும்

இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற அகழ்வு பணிகள் மூலமாக மூடி மறைக்கப்படகூடிய ஆபத்து இருக்கின்றது ஆகவே இந்த விடையத்தில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டவேண்டும் சர்வதேச கண்காணிப்புடன் இவ்வாறான அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாகத்தான் உண்மைகளை வெளிக்கொண்டுவருவதற்கு வழியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tagged in :

Admin Avatar

More for you