Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: March 2024

இராணுவத்தின் புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் மாமூலை டைமன் விளையாட்டு மைதானத்தில்!

மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் 07.04.2024 அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான…

சாலைவீதி மாத்தளன் சந்திவரை புனரமைக்க ஏற்பாடு

இரட்டைவாய்க்கால் மாத்தளன் வரையான வீதி புனரமைத்து தருவதாக இராஜாங்க அமைச்சர் வாக்குறுதி! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பினை நடத்தி வீதி அபிவிருத்தி செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். இராஜாயகங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அமைச்சு பதவியினை பொறுப்பெடுத்ததில் இருந்து இதுவே முதல் தடவையாக முல்லைத்தீவு…

இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டுசுட்டான் ஓட்டுதொழிற்சாலை!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 27 மார்ச் 2024 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கலைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரின் நலம் விசாரிக்கும் நோக்கத்துடன் விஜயம் மேற்கொண்டார், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல்…

கேப்பாபிலவு மக்கள் நில-விடுவிப்பு இராணுவ உயர் அதிகாரி சந்திப்பு மக்கள் ஏமாற்றத்தில் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் அவர்களுக்கு சொந்தமான 56 குடும்பங்களின் 59.5 ஏக்கர் காணியினை விடுவிக்க கோரி  போராட்டங்கள் மேற்கொண்டு வந்தார்கள் இந்த நிலையில் இன்றும் (27)  தங்கள் காணிகளை விடுவிக்க கோரி கேப்பாபிலவு மக்கள் கேப்பாபிலவு இராணுவ படைத்தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தளபதியிடம் தங்கள்…

கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு. முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (27.03.2024) புதன்கிழமை கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையிலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாமிற்கு இராணுவ தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து…

ஒட்டிசுட்டானில் நீர்வழங்கல் வடிகால் சபையின் குழாய் கிணற்றினால் மக்கள் போராடதயார்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியில் உள்ள ஒட்டிசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறுச்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள். ஒட்டுசுட்டான்,சிவநகர்,சம்மளங்குளம்,போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி…

ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ்!

ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது! முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓடு,செங்கல் தயாரிக்கும் ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழில்சாலை போரிற்கு பின்னர் இயங்காதநிலையில் காணப்படுகின்றது. போருக்கு முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழில்சாலையாக ஓடு,செங்கல் என்ப உற்பத்தி செய்யப்பட்டது இதனை நம்பி பல குடும்பங்கள் வேலை செய்தார்கள் அருகில் உள்ள கூழாமுறிப்பு குழத்தில்…

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை!

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு  மக்கள் தெரிவித்தனர்  முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். இதன்போது குறித்த…

முல்லைச்சாரல் பண்பாட்டு மலருக்கான ஆக்கங்கள் கோரல்!

முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்களிடமிருந்து முல்லைச்சாரல் பண்பாட்டு மலருக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து வெளியீடு செய்கின்ற முல்லைச்சாரல் மலருக்கான ஆக்கங்களை சமர்ப்பிக்க ஆர்வமுடைய முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்கள் தங்களது ஆக்கங்களை  15.05.2024 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டகலாசார உத்தியோகத்தருக்கு முகவரியிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் …

மதுபோதையில் சென்ற குழு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல்!

புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் தாக்குதல் -முரண்பாட்டை தேற்றிவித்த நபர்கள்! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கார் ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 25.03.2024 இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மதுபோதையில்…