Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: March 2024

விசாரணைக்கு அழைத்த விமானநிலைய புலனாய்வு குழு!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் (21.03.2024) முல்லைத்தீவிற்கு வருகை தந்த விஷேட புலனாய்வு பிரிவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ள அதேநேரம் தலைவர் மற்றும் செயலாளரை விசாரணைக்காக விமான நிலையத்தில் அமைந்துள்ள புலனாய்வு அலுவலகத்திற்கு சமூகம் தருமாறு அழைப்பு…

முல்லைத்தீவில் உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்- இராணுவ மரியாதையுடன் அடக்கம்!

முல்லைத்தீவில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் (CSD)முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர் இளைஞர் பெண்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களில் பொரும்பாலானவர்கள் இராணுவ பயிற்சி பெற்று பணியாற்றிவருகின்றார்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார்கட்டு வடக்கில் வசிக்கும் கந்தசாமி ஜேக்கப் (மயூரன்) சிவில் பாதுகாப்பு முல்லைத்தீவு மாவட்ட தலைமையத்தின் கீழ் பணியாற்றியுள்ளார்…

புதுக்குடியிருப்பில் சிறுமியினை கர்பமாக்கிய அத்தான்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அக்காவின் கணவரால் கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தானால் 15 அகவை சிறுமி கர்பமாக்கப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன இளவயது கர்பம் தரித்தல் என்பது தற்போது சமூகத்திற்குள் பெரும் சவாலாக…

புதுக்குடியிருப்பில் பெற்ற மகனை கொடூரமாக தாக்கிய இளம் தாய் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு சுதந்திரபுரம் பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது வீட்டில் தனது 7 அகவை மகனிற்கு புத்தக பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது மகனை கொடூரமாக தாக்கிய காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயாரை கைதுசெய்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு…

முல்லைத்தீவு – படப்பிடிப்பு துறையின் வேர்களாக இருந்த கலைஞர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1968 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் ;படபிடிப்பாளர்களாக செயற்பட்ட முதுபெரும் படப்பிடிப்பாளர்களை முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர்கள் கூட்டுறவு  சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்ட படப்பிடிப்பாளர் கூட்டுறவு சங்கத்தின் இவ்வாண்டுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும்,  கடந்த 18.03.2024 அன்று ; ;  புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில்  நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு…

விசுவமடுவில் சிசு எரிப்பு கைதான பாஸ்ரரும்,பெண்ணும் சிறையில் அடைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்பமடைந்துள்ளார் . இந்நிலையில் கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு…

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் ரி.ஐ.டியினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இன்றையதினம் (21.03.2024) முல்லைத்தீவிற்கு வருகை தந்த விஷேட ரி.ஐ.டி குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ள அதேநேரம் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை நாளையதினம் (22.03.2024) விமான நிலையத்தில் அமைந்துள்ள ரி.ஐ.டி அலுவலகத்திற்கு சமூகம் தருமாறு…

வள்ளிபுனம் பகுதியில்முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து!

வள்ளிபுனம் பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தொடராக மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து உடையார்கட்டு பகுதி நோக்கி…

புதுக்குடியிருப்பில்  சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொதி செய்யப்பட்ட கசிப்பு  பைக்கற்றுக்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,  புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்…

வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி!

வெடுக்குநாறி மலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிசாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த எட்டுப்பேரையும் விடுதலைசெய்து வவுனியா நீதிமன்று நேற்று…