Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: January 2024

புதுக்குடியிருப்பில் கைதான கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவரும் சிறையில் அடைப்பு!

15.01.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது ஜஸ்மற்றும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிராம சேவையாளர் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் கடந்த காலங்களின் மக்கள் மத்தியில் கடமையாற்றி வருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு…

தேவிபுரம் வயல் பகுதியில் உடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முள்ளுக்காடு வயல் வெளிப்பகுதியில் இருந்து வயோதிபர்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 16.01.24 இன்று இடம்பெற்றுள்ளது.தேவிபுரம் பகுதியினை சேர்ந்த வயோதி பெண் ஆன மார்கண்டு பாக்கியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை…

புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் செற்பாட்டை கண்டித்து போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின்  செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 19ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேசசபை வாயிலை மறித்து போராட்டத்தினை முன்னெடுக்க இருப்பதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார். இன்றையதினம் (16.01.2024) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் த.நவநீதன் மற்றும் செயலாளர்…

மாவட்ட வைத்தியசாலை சுகாதாரதுறை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பும், கவனயீர்ப்பு போராட்டமும்!

சுகாதார ஊழியர்கள் இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள்…

புதுக்குடியிருப்பில் ஐஸ்சிற்கு அடிமையான கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் கைது!

புதுக்குடியிருப்பில் ஐஸ்சிற்கு அடிமையான கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் கைது! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் ஐஸ்மற்றும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கிராம சேவையாளர் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் கடந்த காலங்களின் மக்கள் மத்தியில் கடமையாற்றி வருவதாக புதுக்குடியிருப்பு…

போதைக்கு அடிமையான கிராம சேவையாளர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கிராம சேவையாளர் ஒருவர் போதைக்கு அடிமையான நிலையில் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள எமது தளத்துடனும் முகநூல் பக்கத்துடனும் இணைந்திருங்கள்.

இரணைமடு வாய்காலுக்குள் சீறி பாய்ந்த மோட்டார் சைக்கில் இருவர் பலி!

கிளிநொச்சியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் முதன்மை வீதியில் பன்னங்கண்டி பகுதியில் இரணைமடு குளுத்தின் பிரதான வாய்காலுக்குள் மோட்டர்சைக்கில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து பாய்ந்ததில் அதில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளார்கள்.இந்த சம்பவம் 13.01.2024 அன்று இடம்பெற்றுள்ளது. அதிகப்படியான வேகமே இந்த உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளதுஉயிரிழந்த இளைஞர்கள் இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியினை சேர்ந்த தயாளன் தனுசன்…

இராணுவ உழவு இயந்திரம் மோதிய விபத்தில்!

இராணுவ உழவு இயந்திரம் மோதிய விபத்தில்! வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று இரவு (12-01-24) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். பணி முடித்து வீடு திரும்பிச்…

முல்லைத்தீவிலும் பணிபுறக்கணிப்பு நோயாளர்கள் அவதி!

நேற்று(10.01.2024) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பிப்பதற்கு மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.நீதியான பொருளாதார கொள்கைக்கு எதிரான அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. தமக்கும் 35,000 கொடுப்பனவை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்சிகிச்சை நிபுணர்கள்,…

குரவில் கிணற்றுக்குள் மண்ணெண்ணெய் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் கடந்த 07.01.2024 அன்று கிணற்றினை இறைக்கும் போது கிணற்றில் இருந்து மண்ணெண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை கிராமத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிணற்று நீரில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது அதன் எரிபற்று நிலையினை உறுதிப்படுத்தப்பட்டு கிராம வாசிகளால் இது மண்ணெண்ணெய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு…