Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: January 2024

கிராமத்திற்கான வீதியினை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு  தெற்கு பகுதியில் உள்ள குரவில் கிராமத்தில் உள்ள டீ-1 வாய்க்கால் வீதி முழுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இதனை திருத்திதருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். உடையார் கட்டு தெற்கு கிராமத்தில் உள்ள 250 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான டி-1 வாய்க்காலுடன் கூடிய வீதியினை நம்பி கிராம…

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (04)உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை…

முல்லைத்தீவில் ஈழத்து இசைக் குயில் கில்மிஷா அவர்களுக்கு பாராட்டு விழா

முல்லைத்தீவில் ஈழத்து இசைக் குயில் கில்மிஷா அவர்களுக்கு பாராட்டு விழா மகரந்தம் கலை இலக்கிய மன்றம் , யோகம்மா கலைக்கூடம் என்பன முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய ஈழத்து இசை குயில் உதயசீலன் கில்மிஷா அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம்(03) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில்…

இடைக்கட்டு கிராமத்தில் யானை தொல்லை நெற்பயிர்கள் அழிவு!

காட்டு யானைகளால் நெற்செய்கைக்கு அழிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இடைக்கட்டு குளத்தின் கீழ் விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் நெற்செய்கை காட்டுயானையினால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. இடைக்கட்டு குளத்தின் கீழ் 60 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் அறுவடைக்கு 15 நாட்கள் இருக்கும் நிலையில் நெற்பயிர்களை…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், சமூக…

முல்லைத்தீவில் டெங்கு நோய் சடுதியாக அதிகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையினருடன் இணைந்து பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் ,இராணுவம், பொலிஸார் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை (03.01.2024)…

 வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் எதிர்ப்பு பணிப்புறக்கணிப்பில்!

வடமாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியும் கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணி நேர பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். தமக்கான சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2013ம் ஆண்டு தொடக்கம் குறித்த கடவை காப்பாளர்கள் பொலிஸ் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நாளார்ந்தம் 250 ரூபாக வீதம் மாதார்ந்தம் 7500ரூபா…