Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: January 2024

புதுக்குடியிருப்பில் தீடீர் நடவடிக்கை!

புதுக்குடியிருப்பில் டெங்கு நோய்பரவலை தடுக்க நடவடிக்கை. துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு பதாகை. புதுக்குடியிருப்பில்  டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன் இணைந்து பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவம்,…

கிழக்கு மாகாண ஆளுனரின் ஏற்பாட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்-தைத்திருநாள் விழாக்கள்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகள் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில்…

முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

முல்லைத்தீவு முள்ளியவளையில் பிறந்து விளையாட்டில் சாதனை புரிந்து இலங்கைக்கு பெருமை சேர்த்த அகிலம் அக்கா என்று அழைக்கப்படும் அகிலத்திருநாயகி அவர்களை இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அகிலத்திருநாயகி அவர்களை ஜனாதிபதி அவர்கள் நேரில் அழைத்து…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க பொதுக்கூட்டம்!

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவியினை பொலீசார் கைதுசெய்துள்ளமையினை கண்டித்து பொலீசாரை கண்டித்து,பொலீசாரின் அடாவடித்தனத்தினை கண்டித்து எதிர்வரும் 08.01.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக பாரிய ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார். 06.01.2024 இன்று முல்லைத்தீவு மாவட்ட…

வவுனியாவில் பொலீசாரின் நடவடிக்கைக்கு வன்மையான கண்டனம்!

நேற்றையதினம்  வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்  என்று இன்று 06.01.2024 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். பொலீசாரின் அடாவடித்தனத்திற்கான இந்த ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளோம்.நேற்றையதினம்  வவுனியா…

மாணிக்கபுரம் பகுதியில் வாள்,கஞ்சா,ஐஸ் உடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் வாள் மற்றும் போதைப்பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். 05.01.24 இன்று மாலை குறித்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யதவேளை அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா,ஐஸ் போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மாணிக்கபுரம் பகுதியினை சேர்ந்த 29 அகவையுடைய நபரே பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்…

புதுக்குடியிருப்பில் 45 லீற்றர் கசிப்புமீட்பு-சூத்திரதாரிகள் தப்பி ஓட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் திம்பிலி பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கிராம அபிவிருத்தி சங்கம்,கோம்பாவில் கிராம சேவையாளர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கிராமத்தில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்….

தேராவில் குளத்தில் நீர் நிரம்பியதால்  பல குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்டிய மக்கள் இன்றும் தண்ணீருக்குள் மத்தியில் வாழ்ந்து வருவதுடன் வீதிகள் குளத்துநீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள். தேராவில் குளக்கரையினை அண்டிய 10 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேராவில் முதன்மை வீதி குளத்து நீரினால்…

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவரை நேற்று (04.01.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தேராவில் இராணுவ சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் 2 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். இதனை உடமையில்…

வவுனியாவில் இருவர் பொலிஸாரால் கைது!

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனக் கூறி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வன்னி மாவட்டங்களுக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வவுனியாவில் இன்று (05) நடைபெற்றது. இதன்போது காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலர் ஜனாதிபதியை காண்பதற்காக நகரசபை வீதியூடாக உள்நுழைய முற்பட்டுள்ளனர். அவர்களை…