Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: October 2023

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்வும், ஊடகவியலாளர் மதிப்பளிப்பும்!

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பும் ஒக்ரோபர்(22)இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தின்…

CCTV கமராவின் கண்காணிப்புக்கு மத்தியில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தமாதம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஒன்பது நாள் செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஒன்பதாம் நாள் நிறைவுடன் மொத்தமாக 17 எலும்புக்கூட்டுத்தொகுதிகள்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தரித்து செல்லும் புகையிரதம்!

மாங்குளம் புகையிரதநிலையத்தில் 21/10/2023  முதல் அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டதைஅடுத்து இன்று கடுகதி  புகையிரதம் காலை 11மணிக்கு  நிறுத்தப்பட்டது   முல்லைத்தீவு மக்களினால்நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பலதரப்பட்டவர்களின்முயற்சியினால் தற்போது இந்த விடையம்  சாத்தியமாகியது.  திணைக்களத்தால்வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி 05.10 க்குகொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் 10.42 க்கு…

Uncategorized

முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி முறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கு இணையவழி இலத்திரனியல் கல்வி முறைமை ஆரம்பம். கள்ளப்பாடு தெற்கு முகிலன் முன்பள்ளியில் Blue Brick School என்ற இணையவழி இலத்திரனியல் கல்வி முறைமை நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த அமரர் திரு. லூயிஸ் போல் அவர்களின் அன்பின் நினைவாக, அவருடைய மகனான திரு.றோஹன்போல் மற்றும் அவரது குடும்பத்தினரால் நிதி உதவி அளிக்கப்பட்டு,…

முல்லைதீவில் தெங்கு செய்கை உள்ளீடுகளை ஊக்குவிக்கும் திட்டம்

தெங்கு சார் உற்பத்தியினை ஊக்குவிக்கும் நோக்கில் சிரட்டைக் கரி தயாரித்தல் சூளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு. முலத்தீவு மாவட்டத்திலிருந்து தெங்கு சார் கைத்தொழிலுக்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் முல்லைத்தீவு விசுவமாடு பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சிரட்டை கரி தயாரிக்கும் சூளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு…

முல்லைத்தீவில் தொழிலாளர்களுக்கான இலவச மண்ணெண்ணெய்! 

முல்லைத்தீவில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு (17.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – நகர்பகுதியில்  இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில்  முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் சரத்…

மாங்குளம்-கடுகதி புகையிரதம் நிறுத்திச் செல்ல வழிசெய்ய வேண்டும்!

மாங்குளம் புகையிரத நிலையத்தில் ஆசன ஒதுக்கீட்டு வசதி மற்றும் கடுகதி புகையிரதம் நிறுத்திச் செல்ல வழிசெய்ய வேண்டும் க.கனகேஸ்வரன் மாங்குளம் புகையிரத நிலையத்தில் ஆசன ஒதுக்கீட்டு வசதி மற்றும் கடுகதி புகையிரதம் நிறுத்திச் செல்லல் ஆகிய சேவையை விஸ்தரித்தால் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் புகையிரத சேவையால் மிகவும் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க…

குருந்தூர் மலைக்கு பயணம் மேற்கொண்ட முக்கிய திணைக்கள அதிகாரிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது இந்த நிலையில் 17.10.23 இன்று குறித்த பகுதிக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் களவியயம் மேற்கொண்டு குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளார்கள். புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன் முல்லைத்தீவு மாவட்ட…

ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

புதுக்குடியிருப்பு ஆத்துப்பிலவு கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. மண்ணின் மரபையும் பண்பாட்டையும் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆத்துப்பிலவு கிராம மக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆத்துப்பிலவு கிராமத்திலிருந்து க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்கள் இன்று (18.10.2023)…

மாங்குளம் புகையிரத  நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்!

முல்லைத்தீவு  மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் நூலக வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகள் இல்லாத நிலைமை தொடர்ச்சியாக காணப்பட்டு வந்தது இந்நிலையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் மாங்குளம் புகையிரத நிலையத்தினர் தொடர்பு கொண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பல்வேறு விதமான…