Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மாங்குளம் புகையிரத  நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்!

முல்லைத்தீவு  மாவட்டத்தின் மாங்குளம் நகர் பகுதியில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் நூலக வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகள் இல்லாத நிலைமை தொடர்ச்சியாக காணப்பட்டு வந்தது

இந்நிலையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் மாங்குளம் புகையிரத நிலையத்தினர் தொடர்பு கொண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பல்வேறு விதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் புகையிரத நிலையத்தை சூழவுள்ள  பகுதிகள் துப்புரவு பணிகள் இடம் பெற்று அங்கு அழகு படுத்தல் வேலைகளும் மர நடுகை திட்டங்களும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இதன் ஒரு அங்கமாக இன்று(15) பல்வேறு நலத்திட்டங்கள் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது

அந்த வகையில்  B .B .K  நிறுவனத்தினருடைய அனுசரணையில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் வசதியும் நூலகத்திற்கான அலுமாரி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நிலையில்  சிறகுகள் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் இந்த நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு திறந்து  வைக்கப்பட்டதோடு  கிரீன் லேயர் அமைப்பினால்  புகையிரத நிலைய  வளாகத்தில் 50  பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கின்ற நிகழ்வும்  இடம்பெற்றிருந்தது

புகையிரத நிலைய அதிபர் க.கலைவேந்தனின் கோரிக்கையின் பேரில் புகையிரத நிலைய அதிபர் க.சுதர்னின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்   யாழ் புகையிரத நிலைய அத்தியட்சகர் சுரேந்திரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் கனகேஸ்வரன்,  மருத்துவர் .க. உதயசீலன்,  B .B .K  கணக்காய்வு நிறுவனத்தின் வவுனியா கிளை முகாமையாளர் சஜிந்தன்,   கிரீன் லேயர் அமைப்பின் பணிப்பாளர் சசிக்குமார்,  சிறகுகள் அமைப்பின் சஜீவன், புகையிரத நிலைய அதிபர் சி.அனுசியன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டிருந்தனர்  

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *