Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் தொழிலாளர்களுக்கான இலவச மண்ணெண்ணெய்! 

முல்லைத்தீவில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு (17.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – நகர்பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில்  முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க, நீரியல்வள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட சம்மேள தலைவர் வி.அருள்நாதன், கடற்தொழில் அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் பத்மன் எனப் பலரும் கலந்து கொண்டு கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணையை வழங்கி வைத்திருந்தனர்.

கடற்றொழிலாளர்களுக்கு முதல்கட்டமாக 75 லீற்றர் வீதம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக 78  லீற்றர் என்ற அடிப்படையில் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா அரசால் கடற்தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மண்ணேண்னைய் 1467 படகுகளுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சம்மேள தலைவர் வி.அருள்நாதன் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் …

 முல்லைதீவு மாவட்டத்தில் கடற் தொழிலாளர்கள் காலத்துக்கு ஏற்ற வகையில் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுகிறது

இந்தியா இழுவை படகுகளின் அத்துமீறல்கள் இனிவரும் நாட்களில் முல்லைத்தீவு கடலில் காணப்படுவதுடன்  வடக்கில் தற்போது வருகை தந்துள்ளனர் இதனையும் கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை வடபகுதி கடல் தொழிலாளர்கள் இந்தியாவிற்கு சென்று இந்தியாவுடன் பேச்சு நடத்துவதற்கு அரசாங்கம் விருப்பம் காணாத நிலையில் அந்த பேச்சுவார்த்தை செல்வதற்காக வடக்கு பகுதி மீனவர்களிடமிருந்து நிதி திரட்டு நடவடிக்கைகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *