Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: July 2023

முல்லைத்தீவில் மலசல குழியில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள்!

08.07.23 இன்று மாலை முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணிஒன்றில் உள்ள மலசல குழியினை துப்பரவு செய்யும் போது அதில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீசார் குழியினை பார்வையிட்டு அடையாளப்படுத்தியுள்ளதுடன்…

தையல் பயிற்சியினை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாமூலை பகுதியில் அமைந்துள்ள வித்தியாதீபம் கல்வி மற்றும் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டு அமைப்பின் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சியினை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தையல் பொருட்கள் கட்காட்சியும் 08.07.23 சனிக்கிழமை இணைப்பாளர் லிகிர்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட பதில் மாவட்டசெயலளர் க.கனகேஸ்வரன்அவர்களும்,சிறப்பு விருந்தினராக…

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக பதவியேற்கவுள்ள-அ.உமாமகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் திரு அ. உமாமகேஸ்வரன் வருகிற ஞாயிற்றுக்கிழமை 09.07.2023 காலை 8.58 – 9 55 சுபவேளையில் பதவி ஏற்கவுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்ப்பட்ட அரச அதிபர் வெற்றிடத்துக்கு இலங்கை நிர்வாக சேவையின் அதிசிறப்பு தரத்தை சேர்ந்த திரு அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தனாவிடமிருந்து…

வவுனியாவடக்கில் கரும்புதோட்டம் வந்தால் முல்லைத்தீவு பாலைவனமாகும்!

முன்னாள் வடமாகாணசபையின் விவவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்கள் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில் வவுனியாவில் கரும்பு செய்கைக்கு 70 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளமை தொடர்பில் விவரமாக எடுத்துரைத்துள்ளார். ஒரு ஏக்கர் கரும்பு செய்கையால் வரும் வருமானத்தினை விட ஏனைய பயிர்களை செய்தால் 5 மடங்கு…

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் தோண்ட தோண்ட மனித புதைகுழியாக!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்திபகுதியில் கடந்த 29.06.23 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் தோண்டும் நடவடிக்கை 06.07.23 இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடைபெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கா கொக்குளாய் முதன்மை வீதி மறிக்கப்பட்டு அதிகளவு பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற…

சர்வதேச நிபுணத்துவம் மேற்பார்வை அடிப்படையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் எம்.ஏ.சுமந்திரன்!

கொக்குத்தொடுவாயில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள்!முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய்  பகுதியில் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளார்கள் இதன் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இந்த அகழ்வு…

மனித புதைகுழி-காணாமல் போனவர்கள் அலுவலகம் இணைந்து செயற்படும்!

06.07.23 முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழ்வு பணிகள் இன்று 06.07.23 முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்த பணிகளில் அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஒ.எம்.பி) பங்கெடுத்துள்ளது அலுவலகத்தின் சட்டத்தரணி ஜெயகநாதன் தற்பரன் நேரடியகா பார்வையிட்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார். இன்று காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகம் ஒரு தரப்பாக…

முல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்ற கரும்புலிகள் தினம்!

முல்லைத்தீவில் தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் சிறப்புற நடைபெற்றுள்ளது.தூயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு பொலீசார்,புலானாய்வாளர்கள் தடைவித்துள்ள நிலையில் தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் முல்லை ஈசன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக சிகப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்….

குருந்தூர் மலையில் – பௌத்தாலோகா நற்பணி மன்றத்தின் நினைவு கல்வெட்டு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்;மலையில் விகாரை அமைப்பு தொடர்பில் நீதிமன்ற கட்டளையில்  12.06.2022 அன்று இருந்தசூழ்நிலையினை பேண வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மீறியும் விகாரை அமைத்து முடிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆழுகையின் கீழ் உள்ள பகுதியில் பௌத்தாலோகா நற்பணி மன்றத்தின்  பெயர்…

நீதிபதி முன்னிலையில் வழிபாட்டினை மேற்கொண்ட பௌத்த துறவிகள்!

குருந்தூர் மலையில் நீதிபதி முன்னிலையில் வழிபாட்டினை மேற்கொண்ட பௌத்த துறவிகள்! 04.07.23 முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் கள ஆய்வினை மேற்கொண்டு வந்த வேளை குருந்தூர்; மலையில் பௌத்த மதகுருமார்கள் சென்ற வழிபாடுகளை மேற்கொண்டுவந்துள்ளார்கள். இந்த சம்பவம் நீதிபதியின் கண்ணில் தென்பட உடனடியாக பொலீசாருக்கு…