Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

இந்திய இழுவைப்படகினால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவ குடும்பத்தின் கதை!

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகள் வராமால் தடுத்தால்தான் இலங்கை மீனவர்கள் நின்மதியாக கடற்தொழில் செய்து வாழமுடியும் என்று இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவினை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

இந்திய இழுவைப்படகினால் கடற்தொழிலை இழந்து மீண்டும் தொழில் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மீனவர் ஒருவரின் கதை..
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் வசித்து வரும் மூன்று பெண்பிள்ளைகளின் தந்தை போரின் போது தனது பிள்ளை ஒன்றினை தொலைத்துவிட்ட நிலையில் மற்றைய ஒரு பெண் பிள்ளையினை கல்வி கற்கமுடியாமல் இடைநடுவில் கல்வியினை நிறுத்திவிட்ட நிலையில் மற்றைய பெண் பிள்ளை சாதாரணம் உயர்தரம் சித்தியடைந்து ஏதோ ஒரு கல்லூரி படிப்பு என்ற நிலையினை எதிர்பார்த்துவிட்டு கடை ஒன்றில் வேலை செய்துவருகின்றார்.

மிகவும் கஸ்ரமான நிலையில் கடன்பட்டு வலைவாங்கி தொழில்செய்து 14 நாட்கள் கடந்துள்ள நிலையில் ஒன்றரை இலட்சம் பெறுமதியான வலையினை இந்திய இழுவைப்படகுகள் அறுத்துவிட்டன இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில்  எனது சொந்த தொழிலான கடற்தொழிலினை கைவிட்டுவிட்டு வாடிகளில் கூலிவேலை செய்து வருகின்றேன் என்று தெரிவித்த அவர்.

போருக்கு முன்னரான 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கடலில் மீன்கள் அதிகமாக இருந்தது அப்போது எந்த கஸ்ரமும் எங்களுக்கு இல்லை மீன் விலையும் குறைவு, 70ரூபா 80 ரூபா போனது இப்போது 700 ரூபாவிற்கு விற்றுகூட எங்களால் வாழமுடியாத நிலை இருக்கின்றது.

இப்போது மீன்படும் வீதம் குறைந்துள்ளது  இதற்கு காரணம் இந்திய இழுவைப்படகுகள்தான்

இந்தியா ஒரு நாடு இந்தியாவின் இழுவைப்படகுகள் எங்கள் கரையில் இருந்து 3 கிலோமீற்றர் தூரத்திற்கு வந்து மீன்பிடிக்கின்றார்கள். 

இதனை இலங்கை அரசாங்கம் கடற்படையினர் எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் இந்த நிலையில் நாங்கள் தொழில் செய்வது என்றால் எவ்வளவு கஸ்ரமாக இருக்கும் இந்திய இழுவைப்படகினால் அழிந்த எனது ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான வலையினை என்னால் வாங்கிக்கொள்ளமுடியாத நிலை.

இப்போது மீன் இல்லாத நிலை இதனால் முதலாளிமாரிடம் நான் வலை எடுக்கப்போகின்றோன் என்று பணம் கேட்டாலும் அவர்கள் கஸ்ரத்தில்தான் இருக்கின்றார்கள்எனது இந்த நிலைக்கு இந்திய இழுவைப்படகுதான் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *