Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வேணாவில் பாடசாலை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களால் புதுக்குடியிருப்பு வேணாவில் பாடசாலை பிரதான வீதி அமைப்பதற்காக நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 115 மில்லியன் ரூபா நிதியில்  22.5 மில்லியன் ரூபா புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டது. 

அந்த வகையில் குறித்த நிதியில்  இருந்து புதுக்குடியிருப்பு வேணாவில் பாடசாலை பிரதான வீதி அமைப்பதற்காக  29.05.24  அடிக்கல் நாட்டி வைக்கப்பெற்றது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,  புதுக்குடியிருப்பு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *