Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மிஹிந்தலையில் இருந்து குருந்தூர் மலை நோக்கி பாத யாத்திரை!

இலங்கையின் பௌத்த சங்கத்தினராகிய மஹாசங்கத்தினரின் ஏற்பாட்டில் மிஹிந்தலையில் இருந்து முல்லைத்தீவிற்கான பாதாயாத்திரை ஒன்று தொடங்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த பாதயாத்திரை எதிர்வரும் 20 ஆம் திகதி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி கட்டப்பட்ட குருந்தி விகாரை நோக்கி பௌத்த துறவிகள் பாதயாத்தரை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வடக்கின் மிகப்பெரிய போதி விகாரை என சிங்கள பௌத்த மக்களுக்கு அறிவிக்கப்பட்ட குருந்தூர் விகாரையினை கட்டுவதற்கா தம்முடன் கைகோர்க்குமாறு குறிப்பிட்டு பௌத்த மத துறவிகள் இந்த பாதயாத்திரையினை தொடங்கியுள்ளார்கள் மிஹிந்தலையில் இருந்து தொடங்கிய இந்த பாதயாத்திரைக்கு பௌத்த மக்கள் வரவேற்பு கொடுத்து உதவிகளும் வழங்கிவருகின்றார்கள் பொலீசாரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றது.

மிஹிந்தலையில் இருந்து குருந்திக்கு என குறிப்பிடப்பட்ட பதாகைகளை வாகனங்களில் தாங்கியவாறான இந்த பாத யாத்திரை கடந்த 16.06.2024 அன்று மிஹிந்தலையில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் கட்டப்பட்ட குருந்தி விகாரையினை முழுமையாக  கட்டிமுடிக்கும் நோக்கில் பௌத்த மதகுருமார்களால் பெரும்பான்மை மக்களிடம் இருந்தும் புலம் பெயர் மக்களிடம் இருந்து நிதிதிரட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்துள்ளன.

இந்த பாத யாத்திரைக்கான ஆதரவினை சமூக வலைத்தளங்களில் கோரப்பட்டு தற்போது பாதயாத்திரை முல்லைத்தீவு மாவட்டத்தினை நெருங்கி வருகின்றது.

மிஹிந்தலையில் இருந்து மதவாச்சி ஊடாக பதவியா சென்று பதவியா ஊடாக வெலிஓயா சென்று வெலி ஓயா ஊடாக கிரிஇப்பன் வெவ ஊடாக நாயாறு சென்று நாயாறு ஊடாக குருந்தூர் மலை செல்வதே இந்த பாதயாத்திரையின் திட்டமிடல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி கட்டப்பட்ட குருந்தூர் மலையில் உள்ள குருந்தி விகாரையினை பாதுகாப்பு கடமையில் அங்கு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள் இந்த விகாரையின் கட்டுமானங்களை இடைநிறுத்த சொல்லி கடந்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார் அந்த தீர்ப்பினையும் மீறி கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது இருந்தும் நீதிமன்ற நீதிர்ப்பின் மறைமுக அச்சுறுத்தல் காரணமாக அந்த நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த வைகாசி வெசாக்தினத்தில் கூட அங்கு பௌத்த வழிபாடுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்தும் தமிழர்களின் ஆதி ஜயனார் ஆலயம் அங்கு காணப்பட்டுள்ளமையும் அதற்கான வழிபாட்டு சுதந்திரம் தமிழர்களுக்கு வழங்கப்படாமையும் உள்ள நிலையில் அங்கு எந்த சேதமும் ஏற்படுத்தக்கூடாது என தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் (18.06.2024) முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் விவசாய அமைச்சர் க.சிவநேசன் உள்ளிட்ட சிலர் சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் அங்கு பொலீசாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் 20 ஆம் திகதி பௌத்த துறவிகளின் பாதயாத்திரை குருந்தூர்மலை நோக்கி வரவிருக்கும் நிலையில் தமிழ் தரப்பிற்கும் பௌத்த தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படலாம் என்ற கோணத்தில் பொலீசார் கண்காணிப்புக்களை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *