Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

தேராவில் வெள்ள அனர்த்த முகாமைத்துவத் திட்டம் அங்குரார்ப்பணம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தேராவில் பகுதியில் கடந்த வருடம் பெய்த அடை மழை காரணமாக தேராவில் குளத்தில் மேலதிக நீர் வெளியேறாது தடைப்பட்டுள்ளதால் குளத்தின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் 17 வீடுகள் வெள்ளத்தால் மிகவும்மோசமாகப் பாதிப்புற்றதுடன் குறித்த வீட்டில் வசித்த மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சுமார் இரண்டு மாத காலம் கடந்தும் வெள்ள நீர் வற்றாத நிலையில்

மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தலிற்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபை , கமநலத் தினைக்களம், வனவளத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு என்பன புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைத்து மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் பின்னர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டது. இப்பிரச்சனைக்கு தீர்வு கானும் பொருட்டு முன்வைக்கப்பட்ட திட்டத்தின் பிரகாரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் A-35 வீதியான முல்லைத்தீவு பரந்தன் வீதியில் சிறு பாலம் அமைப்பதற்கும் லைக்கா ஞானம் அறக்கட்டளையினுடய அனுசரணையில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு ஏதுவாக சுமார் 800 மீற்றர் கால்வை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் பிரகாரம் இன்றய தினம் லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் வெள்ள அனர்த்த முகாமைத்துவத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் இத்திட்டத்துக்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு நீரை வெட்டி அகற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெயகாந்தன், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் உபதலைவரும் முன்னாள் அரசாங்க அதிபருமான திரு.சு.அருமைநாயகம், கமநல சேவை திணைக்கள உதவிப் பணிப்பாளர் திரு.பரணிதரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திரு.சி.கோகுலராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் திரு.க.அரங்கன், வனவள திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *