Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

துணுக்காய் பிரதேசத்தின் விவசாயக்குழுக் கூட்டம்!

துணுக்காய் பிரதேசத்தின் 2024 ஆம் ஆண்டின் 1வது காலாண்டுக்கான பிரதேச விவசாயக்குழுக் கூட்டம் 27.02.2024 செவ்வாய் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது

 தற்போது வடக்கில் அறுவடை நடவடிக்கைகள்  முடிவடைவை நெருங்கியுள்ள போதிலும் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன இதேவேளை தற்போது பெரும்போக அறுவடை நடவடிக்கையில் நெற்கதிர்களுக்கு ஏற்படடிருந்த தத்தி தாக்கங்கள் மற்றும் கபில நிற தாக்கங்கள், எரிபந்த தாக்கம் உள்ளிட்டவை பரவலாக முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் பல கிராமங்களை தாக்கியிருந்ததுகுறித்த நிகழ்வில் 

திருநெல்வேலி விவசாய ஆராய்சி திணைக்கள உதவி  விவசாய பணிப்பாளர் s.ராஜேஷ்கண்ணா கலந்து கொண்டு நெற்செய்கையில் ஏற்படடுள்ள  நோய்த்தாக்கங்கள் உள்ளிட்ட தாக்கங்களுக்கு எந்தவகையான மருந்துகளை பாவிக்கலாம் என்பது தொடர்பிலும்,  வளவளாவி இருந்தார் 

பிரதேச செயலாளர் திரு . இராமதாஸ் ரமேஸ் தலைமையில் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள். கமக்கார அமைப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்  வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய போதனாசிரியர்கள், கிராம மட்ட  விவசாய அமைப்பினர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர் 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *