Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024!

வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் “B” அணி சம்பியன்

வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் நடாத்திய “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024″ கிளித்தட்டு சுற்றுப் போட்டியில் இந்துபுரம் ” B”  அணி சம்பியன் ஆக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இந்துபுரம் ” A”  அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட அதேவேளை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது

கிளித்தட்டு வரலாற்றில் முதல் முறையாக வணங்காமண் மறுவாழ்வுக் கழகம்  பெருமையுடன் நடாத்தும் மாபெரும் “வணங்காமண் வெற்றிக்கிண்ணம் -2024” கிளித்தட்டு சுற்றுப் போட்டிகள்  கடந்த  23.02.2024 அன்று நெடுங்கேணி 17ம் கட்டை துர்க்கா விளையாட்டுக்கழக மைதானத்தில்  ஆரம்பமாகியிருந்தது 

மருவிவரும் தமிழர்களுடைய பாரம்பரியம் மற்றும் வாழ்வியலை மீட்டெடுக்கும் முகமாக  வணங்காமண் மறுவாழ்வுக் கழகம் ஏற்ப்பாடு செய்த மாபெரும் பண்பாட்டு பெருவிழா வில் ஒரு அங்கமாக இந்த கிளித்தட்டு போட்டி நிகழ்வினையும் ஏற்ப்பாடு செய்திருந்தது 

23.02.2024 அன்று ஆரம்பமான  போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்றது   

அந்தவகையில் வணங்காமண் மறுவாழ்வு  கழகத்தினால்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர் பண்பாட்டுப் பெருவிழா 25.02.2024 அன்று  நெடுங்கிணி 17ஆம் கட்டை துர்கா விளையாட்டு கழக மைதானத்தில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அன்றைய தினம் இறுதி போட்டிகள் இடம்பெற்று பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது 

அந்தவகையில் மூன்றாம் இடத்தை தெரிவு செய்வதற்கான போட்டியில் ஆகிய அணிகள் போட்டியிட்டு அணி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது இறுதிப் போட்டியில் இந்துபுரம் மற்றும் இந்து புரம் அணிகள் போட்டியிட்டன இதில் இந்துபுரம் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொள்ள இநதுபுரம் அணி முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது

போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்ற அணி வீரர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதோடு  அணிக்கு இருபத்தையாயிரம் (25000) ரூபாய் பணப் பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது 

போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற அணி வீரர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதோடு  அணிக்கு ஐம்பதாயிரம் (50000) ரூபாய் பணப் பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது 

போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்ற அணி வீரர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதோடு  அணிக்கு ஒரு இலட்சம் (100000 )ரூபாய் பணப் பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *