Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் சட்டவிரோத கருக்கலைப்பு மூவர்கைது!

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவனால் 13 அகவை சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்பம் தரித்த நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் 13.11.23 அன்று முல்லைத்தீவு பொலீசில்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு! உறவுகள் கடும் கண்டணம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர் சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க…

முன்னால் பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமார் காலமானார்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினராகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்ட விஜயகுமார் 14.11.23 அன்று காலமானார். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக செயற்பட்ட விஜயகுமார் அவர்கள் முன்னணியின் பிரதேச சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டார். இந்த நிலையில் நோய் வாய்ப்பட்ட அவர் யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற்றுவந்துள்ளநிலையில்…

முல்லைத்தீவில் நடந்தேறிய உலக சாதனை நிகழ்வு

இலங்கையின் நுவரேலியா மாவட்டத்தை  சேர்ந்த தயாபரன் என்பரின்  ஒருவர் 131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை படைத்துள்ளார் international warriors book of world records   ஒழுங்கமைப்பில் குறித்த உலக சாதனைக்கான டான்ஸ் இடம்பெற்றிருந்ததுநுவரெலியா தாயாபரனே குறித்த உலக சாதனையை பதிவு செய்திருந்தார் குறித்த நடனத்தை இந்தியாவில் இருந்து ரகசிய கண்காணிப்பு கமாரா…

தேராவில் துயிலும் இல்ல காணியினை படையினரிடம் இருந்து விடுவிக்கோரி ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் படைஅணிகளில் இருந்து களமாடி வீரகாவியமான மாவீரர்களை விதை;த இடமாக தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் காணப்படுகின்றது. இந்த பகுதி போரிற்கு பின்னர் இலங்கை இராணுவத்தின் படையினர் அபகரித்து நிலைகொண்டுள்ளார்கள்.குறித்த காணியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் கற்கள் சிலைகள் அனைத்து அகற்றப்பட்ட நிலையில்…

புதுக்குடியிருப்பில் இடைநிறுத்தப்பட்ட வடிகால் துப்பரவு பணி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியின் சுமார் 3.5 கிலோமீற்றர் தூரம் கொண்ட வடிகால் துப்பரவு செய்வதற்கு பிரதேச அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வடிகால்பகுதியில் பாரியளவிலான நீர் தாவரங்கள் காணப்படுவதால் இனிவரும்காலம் மழை காலம் என்பதால் அதனை அப்புறப்படுத்தி வடிகாலை சீர்செய்தால்தான் நீர்; வழிந்தோடக்கூடிய நிலமை…

வடக்கில் சீனாவின் பிரசன்னம் ஆமை புகுந்த வீடாக மாறும் இலங்கை!

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மெல்ல மெல்ல தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்திலும் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதை சீன தூதுவர் வவுனியாவிற்கு விஜயம் செய்து  வவுனியா மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தமை மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. இவர்களது திடீர் அக்கறை காலம் காலமாக…

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுவிழ!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச சபை மற்றும் கலாச்சார பேரவை இணைந்து நடாத்தும் 2023 ம் ஆண்டுக்கான கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற பண்பாட்டு…

மாணன் ஒருவரை புலமைபரிசில் எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்! 

தமது பெருமைக்காகவும் பாடசாலை பெயரை காப்பாற்றுவதாகவும்  மாணன் ஒருவரை புலமைபரிசில் எழுதவிடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்! மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கோம்பாவில்  பாடசாலையில் தரம் 5 இல் கல்விகற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவன் வயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட காரணத்தினால் இரண்டு மாதங்கள்  பாடசாலை செல்லவில்லை…

கற்பூரப்புல் இந்து மயான வீதி மற்றும் மயானம் என்பன சுத்தம் செய்யும் பணி!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளியவளை கிழக்கு அபிவிருத்தி சங்கத்தின் எல்லைக்குட்பட்ட கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு செல்லும் வீதி மற்றும் மயானம் என்பன பிரதேச சபையின் உதவியுடன் புனரமைப்பு பணிகள் செய்துவைக்கப்பட்டுள்ளன. மழைகாலம் தொடங்கியுள்ளதால் குறித்த மயானத்திற்கு செல்லும் வீதி பற்றைக்காடுகளாக காணப்படுவதுடன் மயானமும் பற்றைகளால் காணப்படுவதை கருத்தில் கொண்டு முள்ளியவளை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின்…