53 இலட்சம் ஆண்டு குத்தகை அசிங்கமாக கிடக்கும் புதுக்குடியிருப்பு சந்தை!


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் அதிகளவான வருமானத்தினை கொண்ட பொது சந்தையாக புதுக்குடியிருப்பு பொது சந்தை காணப்படுகின்றது.

இந்த ஆண்டு 2023 புதுக்குடியிருப்பு பொது சந்தை 53 இலட்சம் ரூபாவிற்கு குத்தகைக்கு விட்டு பிரதேச சபை வருமானத்தினை பெற்றுக்கொண்டுள்ளது இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பொது சந்தையினை பராமரிக்கவோ அல்லது சீர்செய்து வியாபாரிகளின் வியாபார நடவடிக்கையினை இலகுபடுத்தாத நிலை காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாக புதுக்குடியிருப்பு பிரதேசம் காணப்படுகின்றது இந்த மக்களுக்கு நீண்டகாலமாக காணப்படும் பொது சந்தை பல்வேறு குறைகளுடன் இயங்குவதாகவும் சரியான சுகாதாரமில்லாத நிலை,பழுதடைந்த வணிக நிலையங்கள் திருத்திக்கொடுக்கப்படாத நிலை,பகல் வேளைகளில் கட்டாக்காலி கால்நடைகளால் மரக்கறி மற்றும் பழ வியாபாரிளுக்கு ஏற்படும் இடையூறு என பல நிர்வாக சீர்கேடுகள் இயங்கிவருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது புதுக்;குடியிருப்பு பரந்தன் வீதியில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக மரக்கறி கடைகள்,மீன்கடைகள்,இறைச்சி கடைகளுக்கு பிரதேச சபை அனுமதி கொடுத்து அங்கு இயங்கி வருவதால் புதுக்குடியிருப்பு சந்தை வியாபாரிகளின் வியாபாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது இதனால் அடுத்த ஆண்டு பிரதேச சபை பாரிய வருமான இழப்பினை சந்திக்கக்கூடும் என சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த சில மாதங்களாக சந்தையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சந்தை வியாhரிகளால் எடுத்துரைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *