துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இறந்த நிலையில் யானை ஒன்று மீட்பு


முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடு புலிமச்சிநாதகுளம் பகுதியில் வயல் வெளியில் இறந்த நிலையில் யானை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது

வயல் பார்வையிட சென்றவர்களால் இறந்த நிலையில் யானை அடையாளம் காணப்பட்டு, கிராம சேவகர் ஊடாக ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு பிரதேச வாசிகள் தகவல் வாங்கியுள்ளனர்

இதேவேளை இறந்த யானை பெண் யானை எனவும் ,அது 30-35 வயதினை கொண்டதெனவும், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குறித்த யானை உயிரிழந்துள்ளது எனவும் ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உறுதிப்படுத்தினர்

இறந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் இன்று மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெறும் எனவும் தெரிவித்தனர்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *