வற்றாப்பளை பொங்கலில் மாலை வரை 17 நகை கொள்ளை சம்பவங்கள்!

பல இலட்சம் பக்த்தர்கள் கலந்துகொள்ளும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்வு இன்று 05.06.23 சிறப்புற நடைபெற்றுவருகின்றது.

வடக்கு கிழக்கிலயே பல இலட்சம் பக்கதர் ஒரே நாளில் ஒன்றுகூடி வழிபடும் தலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத்தை நிகழ்த்தும் அதிசய ஆலயம் என்ற பெருமையோடு முல்லைத்தீவு நந்திக் கடலோரம் கண்ணகித்தாய் வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டு இருக்கின்றாள்.

இன்றைய நாள் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்தும் வெளிநாடுகளிலும் இருந்து வருகை தந்து கண்ணகி அம்மனை வழிபடுகின்றார்கள்.

இன்றைய தினம் அதிகாலை நான்கு மணியில் இருந்து பூசைகள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இன்று மாலை வரை பல லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தினை தரிசித்துள்ளார்கள். தொடர்ச்சியாக பேருந்துக்களிலும் ஏனைய வாகனங்களிலும் மக்கள் வந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது பெருமளவான பக்த்தர்கள் காவடிகள்,பாற்செம்புகள் எடுத்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்வதுடன் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்தும் அம்மனின் அருளாசியினை பெற்று வருகின்றார்கள்

பக்த்தர்களோடு பக்த்தர்களாக திருடர்களும் தங்கள் கைவரிசையினை காட்டிவருகின்றார்கள் இன்று (05.06.23) மாலை 3.00 மணிவரை 17 பக்த்தர்களிடம் நகை கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆலய பொலீஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

பலபக்த்தர்கள் தவறவிட்ட கைப்பை மற்றும் நகைகள் என்பன நல்ல உள்ளம் கொண்ட பக்த்தர்களால் எடுத்துஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் சம்பவங்களும் ஆலயத்தின் அறிவித்தல்கள் ஊடாக அறியமுடிகின்றது.

ஆலய பொங்கல் நகழ்விற்காக ஆயிரம் வரையான பொலீசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Tagged in :

Admin Avatar

More for you