ஆனந்த புரத்தினை சேர்ந்த இளைஞர்கள் முள்ளியவளையில் மாடு கடத்தல்!

புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இன்று இரவு 11.00 மணியளவில் முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் முன்றலில் மாடு கடத்தலில் ஈடுபட்ட வேளை பிரதேச இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டு முள்ளியவளை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை பகுதியில் கால்நடை வளத்து தங்கள் வாழ்வாதாரத்தினை போக்காட்டிவரும் குடும்பங்களில் பல கால்நடைகள் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ளன இறச்சிக்காக மாடு கடத்தும் கும்பல் ஒன்ற இரவு நேரங்களில் மாடுகள் கடத்தப்பட்டு வருவதாக பிரதேச இளைஞர்கள் மத்தியில் தகவல் கிடைத்துள்ள நிலையில் முள்ளியவளை இளைஞர்கள் விழிப்படைந்துள்ளார்கள்.

அந்த நிலையில் இன்று 15.05.23 இரவு முள்ளியவளை காட்டுவிநாயகர் கோவிலுக்கு முன்பாக உந்துருளியில் வந்த இருவர் உந்துருளியினை வேறு இடத்தில் விட்டுவிட்டு ஆலய சூழலுக்க அருகில் நின்ற மாட்டினை பிடிப்பதற்காக கயிறு எறிந்த வேளை பிரதேச இளைஞர்களால் ஒருவர் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய நபர்தப்பி ஓடிய நிலையில் இடம் தெரியாமல் நீண்ட நேரத்தின் பின்னர் முள்ளியவளை இளைஞர்களிடம் வந்துசரணடைந்துள்ளார் தாங்கள் பெண்களுடன் உறவாட வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் முள்ளியவளை பிரதேச இளைஞர்களா நையப்புடைக்கப்பட்ட இரண்டு மாhட்டு திருடர்களும் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
இறச்சிக்காக மாட்டினை விற்பனை செய்யும் கும்பல் ஒன்று வெளிபிரதேசங்களை சேர்ந்தவர்களை வைத்து முள்ளியவளையில் உள்ள கால்நடைகளை இரவு நேரங்களில் பிடித்து வாகனங்களில் கடத்தப்பட்டு வருவதாக கால்நடை வளர்போர் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இந்த மாடுகடத்தல் பின்னணியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இறைச்சிக்காக மாடு கொள்வனவு செய்யும் நபர் ஒருவரும் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்

Tagged in :

Admin Avatar